India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மணல்மேடு அருகே கடலங்குடி கடைதெரு வழியாக செட்டி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை கண்ட மக்கள் மணல்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மணல்மேடு போலீசார் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இறந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

புதுப்பேட்டை அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் தொழிலாளி சிவசங்கர் (40). இவருக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் ஜனவரி 16, 17 உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளுக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் மற்றும் அலங்காநல்லூர் பாலமேடு கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஜன.21 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், குறளாசிரியர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள 15 ஆசிரியர்கள், 15 அரசு ஊழியர்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் ஜன.9 அன்று பிற்பகல் 2 மணிக்கு, இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளபவர்கள் 9361521593 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

OMR–ECR இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.270 கோடி மதிப்பில் எஃகு பாலம் அமைக்கப்படுகிறது. பல்லாவரம்–தொரைப்பாக்கம் ரேடியல் சாலை நீட்டிப்பிலிருந்து புறப்பட்டு, ECR-இல் இருந்து 200 மீட்டர் தொலைவில் பாலம் தரையிறங்கும். பணிகள் தொடங்க, துரைப்பாக்கத்தில் 58 குடும்பங்களும், நீலாங்கரை பகுதியில் பட்டா நிலங்களில் வசிக்கும் 63 குடும்பங்களும் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரம்பலூரை சேர்ந்த நவீன் குமார் (25) என்ற இளைஞர், தஞ்சாவூர் விளார் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பிரியங்கா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நவீன் குமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து 40 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொல்லங்கோடு அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் நளினாட்சன் நாயர். இவரது மனைவிக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் ஜன.5 அன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரவு தூங்க சென்ற நளினாட்சன் காலை வெகுநேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்தபோது நளினாட்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு.

பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணி (56). இவரது மனைவி சுசீலா (52). மணி தொழிலுக்காக கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும் மணி மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணி (56). இவரது மனைவி சுசீலா (52). மணி தொழிலுக்காக கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும் மணி மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.