Tamilnadu

News January 7, 2026

சேலத்தில் முறையற்ற உறவால் நேர்ந்த பயங்கரம்!

image

சேலம்:சிவதாபுரம் அருகே பனங்காட்டைச் சேர்ந்த தனபால் (42) மற்றும் அவரது மனைவி பிரியா (34) ஆகிய இருவரும் தீப்பற்றி உயிரிழந்தனர்.உயிரிழப்பதற்கு முன் தனபால் அளித்த மரண வாக்குமூலத்தில்,தனது மனைவியின் முறையற்ற உறவைக் கண்டித்ததால்,ஆத்திரமடைந்த பிரியா பெட்ரோலை ஊற்றித் தனக்கும் தீ வைத்ததாகக் கூறியுள்ளார். இந்த விபரீத முடிவால் இவர்களது 4 குழந்தைகள் (3 பெண், 1 ஆண்) தற்போது ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

News January 7, 2026

கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

image

கிருஷ்ணகிரி: பேரிகை அருகே உள்ள நரிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடராமன்(64). இவர், அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், காபலூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 7, 2026

தேனி: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…!

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (28). இவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உமா மகேஸ்வரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 7, 2026

தஞ்சை: தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரியில் வருகிற 10ந்தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இம்முகாமானது அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுனர்கள் தங்களது விவரங்களை <>www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. SHARE பண்ணுங்க!

News January 7, 2026

புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருவள்ளூரில் பவர் கட்டா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன 07) பராமரிப்பு பணிகள் காரணமாக கடம்பத்துார், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், ஆட்டுப்பாக்கம், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், அகரம் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் வரவில்லை அல்லது மின்சாரம் குறித்த புகாருக்கு 94987 94987-ஐ அழைக்கலாம்.(SHARE IT)

News January 7, 2026

இராணிப்பேட்டை: 2,353 மாணவர்களுக்கு மடிக்கணினி

image

இராணிப்பேட்டையில் தமிழக அரசின் “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் பயிலும் 2,353 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. இத்திட்டம் மாணவர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த நிகழ்வில் பல அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

News January 7, 2026

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை ( ஜனவரி. 8 ) விடியற்காலை 1:20am மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கரக்பூர், கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை – பரௌனி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் மக்களே, மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News January 7, 2026

திண்டுக்கல்லில் திட்டங்களை பட்டியலிட்ட CM ஸ்டாலின்!

image

திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திண்டுக்கல்லில் மட்டும் 1.02 லட்சம் பேருக்குப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றது. மேலும், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 10,000 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என்றும் சுமார் 4 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

News January 7, 2026

BREAKING: ஸ்ரீபெரம்பத்தூரில் கடைகள் இழுத்து மூடல்

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி இயங்கிய குடோன்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. கைவல்யம் நகரில் செயல்பட்டு வந்த குடோன்கள், ஆலைகளால் காற்று, ஒலி மாசு ஏற்படுவதாக மக்கள் புகார் அளித்ததில் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதிகாரிகள் வழங்கிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கப்படாததால் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!