Tamilnadu

News January 7, 2026

சென்னை: உங்க MLA சரி இல்லையா? பொறுக்காதீங்க!

image

சென்னை மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News January 7, 2026

செங்கல்பட்டு பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஜனவரி (06) போட்டோ வீடியோ கலைஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட போட்டோ வீடியோ சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் எத்திராஜ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் போராட்டத்தில் ஏராளமான புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

News January 7, 2026

பெரம்பலூர் மக்களே! இந்த விஷயம் தெரியுமா?

image

தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த ‘பெரும்புலியூர்’ தான் இன்று ‘பெரம்பலூர்’ ஆக மாறியுள்ளது. இங்கு பராமத்து பணிக்காக குன்னம் பகுதியில் ஏரியை ஆழப்படுத்திய பொழுது பல நூறு ஆண்டுகள் முன்னால் கடலில் வாழ்ந்த உயிரனங்களின் படிமம் கண்டெடுக்கபட்டது. இதனால் ஒரு காலத்தில் பெரம்பலூர் கடல்பகுதியாக இருந்து இருக்கலாம் என ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

நாமக்கல் பயங்கரம்: கல்குவாரியில் தொழிலாளி பலி!

image

நாமக்கல், பெரிய சூரம்பாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் மாலை 300 அடி பள்ளத்தில் இருந்து ஒரு டிப்பர் லாரி மண் கற்களை ஏற்றிக்கொண்டு மேலே வந்தது. அப்போது பாரம் தாங்காமல் அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லோடு மேன் சுப்பிரமணி (வயது 64) உயிரிழந்தார். டரைவர் வேணுகோபால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 7, 2026

குமரி: மின் கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பலி!

image

குளச்சல் பகுதியை சோ்ந்த சமையல் தொழிலாளியான அமீா் சுல்தானும்(35), அவரது சகோதரா் பீா்முகமதுவும் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சென்றனர். அப்போது சாஸ்தான்கரை சாலையில் பைக் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அமீா்சுல்தான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பீா்முகமது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் விசாரணை.

News January 7, 2026

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

சமூகத்தில் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளுக்கு, “முன்மாதிரி விருது” மற்றும் ஒரு லட்சம் காசோலை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியான திருநங்கைகள் <>www.awards.tn.gov.in <<>>என்ற தளத்தில் வரும் பிப்.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2413796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

மயிலாடுதுறை: ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழப்பு

image

சீர்காழி ரயில் நிலையம் அருகில் பாதரக்குடி பகுதியில் இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 3 1/2 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. ரயில் பாதையை சோதனையிட சென்ற ரயில்வே கீமேன்கள் அதைக் கண்டு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். ரயில்வே போலீசார் மானின் உடலை கைப்பற்றி சீர்காழி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

News January 7, 2026

நெல்லையில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்

image

நெல்லை மாவட்டத்தில் நாளை (டிச.08) காலை 9 மணி – 2 மணி வரை கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைதோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம்.கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய இடங்களில் மின்தடை.

News January 7, 2026

நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே.., பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள், ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படவுள்ள நிலையில் ரொக்கம்ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாமல் போக வாய்ப்புண்டு. இந்த சிக்கலை தீர்க்க இப்பவே<> இங்கே க்ளிக்<<>> செய்து Grievance Redressal, நீலகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். SHARE IT

News January 7, 2026

கரூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே.., பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள், ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படவுள்ள நிலையில் ரொக்கம்ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாமல் போக வாய்ப்புண்டு. இந்த சிக்கலை தீர்க்க இப்பவே இங்கே<> க்ளிக்<<>> செய்து Grievance Redressal, கரூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். SHARE IT

error: Content is protected !!