Tamilnadu

News March 29, 2024

அதிர்ச்சி: சென்னையில் வெடிகுண்டு..?

image

சென்னை: அசோக் நகர் வாசுதேவபுரம் பகுதியில் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக, நேற்று நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் மிரட்டல விடுத்துள்ளார். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் புரளி என தெரியவந்தது.

News March 29, 2024

நெல்லைக்கு வருகை தரும் பிரேமலதா

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி கூட்டணி கட்சியான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட தேமுதிகவினர் செய்து வருகின்றனர்.

News March 29, 2024

திருவள்ளூர்: நாளை முழு வேலை நாள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொடக்க நிலை உயர்நிலை மேனிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை(மார்ச்.30) முழு வேலை நாள் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். எனவே நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும்.

News March 29, 2024

தூத்துக்குடி அருகே 6 பேர் கைது

image

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, அஜித்குமார், கார்த்திக் உட்பட 6 இளைஞர்கள் நேற்று அண்ணா நகர் பகுதியில் சாலையில் சென்ற ஒருவரிடம் அருவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

News March 29, 2024

தி.மலை: களத்தில் இறங்கிய கலெக்டர்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் – ஆரணி செல்லும் சாலையில் மங்களமேடு பகுதியில் 2024 மக்களவை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மூலம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாகன சோதனையில் ஈடுபட்டார். ஆவணங்கள் முறையாக கையாளப்படுகிறதா? என பார்வையிட்ட அவர் பறக்கும் படையினர் சோதனையிடும் முறையை நேரடியாக ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

News March 29, 2024

தேனியில் இனி குதூகலம்

image

தேனி மாவட்டம் சீலையம்பட்டியை மையமாகக் கொண்டு முல்லைப் பெரியாறு ஆறு உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கோடைகால விடுமுறையை ஆனந்த குளியல் இட்டு கழிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து இளைஞர்களும் இங்கு வந்து ஆனந்த குளியல் இடுகின்றனர். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரைத் தொடங்கப்பட இருப்பதால் தண்ணீர் வரத்து சற்று மிக குறைவாக உள்ளது.

News March 29, 2024

ஈரோடு தொகுதியில் 45 மனுக்கள் ஏற்பு

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 52 வேட்பு மனுக்களில் கூடுதல் மனுக்கள், வயது குறைவு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது என 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 45 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாளை இறுதி நாளாகும் .

News March 29, 2024

போளூர்: பள்ளிக்கு விரைந்த ஆட்சியர்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (29.03.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News March 29, 2024

கனிமொழி எம்பி பிரச்சார நிகழ்ச்சி விபரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூசை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வருகிற ஒன்றாம் தேதி மாலை 4 மணிக்கு வள்ளியூர் காமராஜர் சிலை அருகே பேசுகிறார். இரண்டாம் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி டவுன் வாகையடி முனை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என தேர்தல் பணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

News March 29, 2024

கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு ஒத்திவைப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், 11 பேர் திருநெல்வேலி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று (மார்ச் 28) ஆஜராகினர். இதில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!