Tamilnadu

News March 25, 2024

சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 101.2 டிகிரி பதிவாகியுள்ளது

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச். 25) மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News March 25, 2024

மதுரையில் ஒரே நாளில் 6 இளம்பெண்கள் மாயம்!

image

மதுரையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 6 இளம்பெண்கள் நேற்று ஒரே நாளில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளிக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி நாகரத்தினம் 17, திருப்பாலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரேஷ்மா 18, ஒத்தக்கடையை சேர்ந்த கல்லூரி மாணவி அபிநயா 18, மேலூரை சேர்ந்த மகாலட்சுமி 23, உள்ளிட்ட 6 பேர் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இன்று நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் படை சூழ கலந்து கொண்டனர். திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

பாதிரியார் வேட்பு மனு தாக்கல்

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் வேட்பாளர் பிஷப் காட்பிரி நோபல் என்ற பாதிரியார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தர். அப்போது அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

News March 25, 2024

தூத்துக்குடியில் வெளியான பட்டியல்

image

தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது, தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 106 மையங்களில்10 ஆயிரத்து 854 மாணவர்கள் 11, 453 மாணவிகள் என மொத்தம் 23,237 மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

கடலூரில் பாமக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் பாமக மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், ஜெகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இ‌தி‌ல் திருவண்ணாமலை ம‌த்‌திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். அதிமுக வேட்பாளருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

News March 25, 2024

பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

ஆரணி தொகுதியில் போட்டியிடும் பாமக   வேட்பாளர் அ.கணேஷ்குமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

உடன் பாஜக மாவட்ட தலைவர் சி ஏழுமலை ,பையூர் சந்தானம் உள்ளிட்டோர் இருந்தனர்.

News March 25, 2024

செங்கம்: மாணவர்களுக்கான சிறப்பு பூஜை

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தாெடங்கவுள்ளதால் செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில், ஸ்ரீஅனுபாம்பிகை
ரிஷபேஸ்வரர் திருக்கோயில் மற்றும் காக்கங்கரை ஸ்ரீவிநாயகர் ஆலயம் ஆகியவற்றில் அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்த அறங்காவலர் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News March 25, 2024

திருப்பத்தூர்: பதட்டமான வாக்குச்சாவடிகளில் எஸ்பி ஆய்வு

image

ஆம்பூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பதட்டமான  வாக்குச்சாவடிகளாக கருதப்படும் பி கஸ்பா ரெட்டி தோப்பு, சான்றோர் குப்பம், மற்றும் மேல்மிட்டாலம் வெங்கட சமுத்திரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாச்சம்பட்டு மற்றும் பேராம்பட்டு சோதனைச் சாவடிகளையும் எஸ்பி பார்வையிட்டார்.

error: Content is protected !!