Tamilnadu

News January 9, 2026

திருப்பதி இயற்கை முகாமிற்கு சென்ற இராணிப்பேட்டை மாணவர்கள்

image

இராணிப்பேட்டை ஆட்சியர் டாக்டர் ஜே.யு.சந்திரகலா, ஐ.ஏ.எஸ்., அவர்கள், இன்று (ஜன.08) திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெறும் இரு நாள் குடியிருப்பு இயற்கை முகாமில் பங்கேற்கும் 50 மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த முகாம் மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

News January 9, 2026

மாவட்ட ஆட்சியருக்கு நாள்காட்டி வழங்கிய செயல் அலுவலர்

image

மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில்
1300க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்கள் வீடுகளுக்கும் தினசரி நாள்காட்டி வழங்கப்பட்டது. இன்று (ஜன.8) ஆட்சியரை நேரில் சந்தித்து ஊராட்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வைத்து ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குகாலண்டர் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரா. பரமசிவம் ஊராட்சி மன்ற செயல் அலுவலர் ஆவார்.

News January 9, 2026

பொங்கல் கலை விழா குறித்து ஆலோசனை கூட்டம்!

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைப் பண்பாட்டு துறையின் சார்பில் பொங்கல் கலை விழா நடத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (ஜன.08) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 9, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.08) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ₹ 138.50 கோடி ஒதுக்கீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 333 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ₹ 138.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜன.8) தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

திருவள்ளூர் இரவு நேர ரோந்து பணி விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்போது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

திருவெண்ணைநல்லூர் அருகே மயான பாதை ஆட்சியர் ஆய்வு

image

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சின்னசெவலை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சியில் மயானப்பாதை அமைப்பது தொடர்பாக ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.08) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இருந்தனர். விரைவில் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 8, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.08) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 8, 2026

சரிவை நோக்கி முட்டை விலை; பண்ணையாளர்கள் கவலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.80-க்கு விற்பனையாகி வந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் ரூ. 5.60- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News January 8, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (08.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!