Tamilnadu

News April 4, 2024

தேர்தல்: விழுப்புரத்தில் கமல் ஹாசன் பேச்சு

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் நேற்று (ஏப்.3) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சிறு தொழில் செய்ய முடியவில்லை. எல்லாம் கார்ப்பரேட் மயமாகிவிட்டன. அவர்கள் செய்த தேச துரோகங்களில் தேர்தல் நிதி பத்திர மோசடியும் ஒன்று என பேசினார்.

News April 4, 2024

புதுகை:மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் கைது

image

கறம்பக்குடி அருகேயுள்ள வாணக்கன்காடு சோ்ந்த கோ.மூக்கன் இவரது மனைவி ஜீவிதா இவா்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக நேற்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,மூக்கன் கட்டையால் தாக்கியதில் ஜீவிதா பலத்த காயமடைந்தாா். மயங்கிய நிலையில் அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜீவிதா உயிரிழந்தார்.

News April 4, 2024

விருதுநகர்: சிறப்பு செலவு கணக்கு பார்வையாளர் எண் அறிவிப்பு

image

தமிழக அளவிலான சிறப்பு செலவு கணக்கு பார்வையாளர் தொடர்பு எண் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக அளவிலான சிறப்பு செலவு கணக்கு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை 9345298218 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான முனைவர் ஜெயசீலன் இன்று செய்தி வெளியீட்டின் மூலம் தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

திருச்சி: மது தராததால் பாரில் கத்தி குத்து

image

தென்னூர் பாரதி நகரை சேர்ந்த சுரேந்தர் தனது நண்பருடன் குப்பநத்ததில் உள்ள பாரில் நேற்று மது அருந்தி கொண்டிருந்தார்.அங்கு வந்த குப்பனத்தை சேர்ந்த ரவுடி தினேஷ்குமார் சுரேந்தரிடம் மது கேட்டுள்ளார்.அவர் கொடுக்க மறுக்கவே தகாத வார்த்தையால் திட்டியதுடன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த சுரேந்தரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் தினேஷை கைது செய்தனர்.

News April 4, 2024

கடலூர்: பாலியல் தொல்லை- வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும்,ஓட்டுனருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும்.ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

மரியாதையை மோடி அரசு கொடுப்பதில்லை – ரோஹிணி

image

கொடைக்கானலில் திமுக கூட்டணியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான ரோகிணி கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் பிஜேபி ஆளுகின்ற குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27% மட்டுமே இருப்பதாகவும், பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு அவர்களுக்கு முறையான மரியாதை மோடி கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

News April 4, 2024

தேனி தொகுதியில் 6074 வாக்குச்சாவடி அலுவலர்கள்

image

தேனி மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1225 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1469 தலைமை அலுவலர்களும், நிலை-1 வாக்குப்பதிவு அலுவலர்கள் 1469, நிலை-2 வாக்குப்பதிவு அலுவலர்கள் 1469, நிலை-3 வாக்குப்பதிவு அலுவலர்கள் 1469, நிலை-4 வாக்குப்பதிவு அலுவலர்கள் 198 நபர்கள் என மொத்தம் 6074 நபர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.

News April 4, 2024

விருதுநகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற இலச்சினை வரைபட வடிவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

News April 4, 2024

அரக்கோணம்: மின்சார ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு

image

அரக்கோணம் அடுத்த திருவலங்காட்டை சேர்ந்தவர் சவுமியா(27), தனியார் கம்பெனி தொழிலாளி. இவர்  வேலை நேரம் முடிந்து நேற்று(ஏப்.3) திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வரும் மின்சார ரயிலில் பயணம் செய்தார். அப்போது, மணவூர் அருகே இளைஞர் ஒருவர் சவுமியா அணிந்திருந்த ஒரு சவரன் செயினை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 4, 2024

அதிமுகவில் இணைந்த கம்யூனிஸ்ட் நிர்வாகி

image

முத்துப்பேட்டை வட்டம் பின்னத்தூர் ஊராட்சியில் பின்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செங்குட்டுவன் கோவிலூர் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் 85 நபர்களுடன் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி அதிமுக திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

error: Content is protected !!