Tamilnadu

News March 20, 2024

தென்காசி:திமுக மகளிரணி தொண்டரணி ஆலோசனை கூட்டம் 

image

தென்காசியில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே_ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மற்றும் மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணியினர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

News March 20, 2024

எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

வாடிப்பட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சி மன்ற பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தாதம்பட்டி, ஒட்டான் குளக்கரையில் உள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அறைகள் நேற்று மாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

News March 20, 2024

கடலூர்:பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா

image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறையில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம், முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் தொடக்க விழா, மகாகவி பாரதியார் – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (மார்ச் -19) நடைபெற்றது.
துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்துகொண்டு முப்பெரும் விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

News March 19, 2024

பழனியில் சிறப்பு அனுமதி சீட்டு கிடையாது

image

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 2024- நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்டு “வி.ஐ.பி சிறப்பு அனுமதி சீட்டுகள் ” வழங்கப்படாது என திருக்கோயில் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் மற்றும் அரசியல் பிரமுகர் பொது தரிசன வழியை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 19, 2024

மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

image

ஈரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் இந்த ஆண்டு முதலாம் காலாண்டுக்கான மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மார்ச் நடைபெற உள்ளது. எனவே மின் வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஈரோடு மின் மண்டல தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

நெல்லையில் மீண்டும் சாதிய தாக்குதல்

image

தாழையூத்து செல்வன் நகர் பகுதியைச் சேர்ந்த வண்ணார் வகுப்பை சேர்ந்த 2 இளைஞர்களை அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியை சேர்ந்த ஒரு கும்பல் இன்று (மார்ச் 19) தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சுடலைமுத்து என்பவர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் சுடலைமுத்துவை சிபிஐ எம்எல் கட்சியினர் இன்று மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

News March 19, 2024

தேர்தல் குறித்து கலெக்டர் அதிரடி உத்தரவு

image

இராமநாதபுரத்தில் ஓட்டுப்பதிவு உட்கட்டமைப்பு வசதிகள், ஓட்டுப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வருகை தரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம், மக்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகள் போன்றவற்றை சரியாக உள்ளதா எனவும், போதியளவு மின்சார வசதி, குடிநீர் வசதியினை வழங்கிடவும், அலுவலர்கள் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News March 19, 2024

கடலூர்: வாகனங்களில் கட்சி கொடியை அகற்ற அறிவுறுத்தல்

image

நாடாளுமன்ற தேர்தலை (2024) முன்னிட்டு கடலூர் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இன்று மாலை மஞ்சக்குப்பம் பகுதியில் டி.எஸ்.பி பிரபு தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது கட்சி கொடியுடன் வந்த வாகனங்களை நிறுத்தி கொடிகளை அகற்றுமாறு வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.

News March 19, 2024

கள்ளக்குறிச்சி: நாளை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமாரிடம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

நாகையில் பெண் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

image

நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக வெளிப்பாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட தேன்மொழி கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!