India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலக தெருவில் உள்ள ரேடியன் ஐஏஎஸ் அகாடமியில் தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் வருகிற 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. 18 வயது நிரம்பிய ஆண் பெண்கள் பங்கேற்கலாம். சேர விரும்புபவர்கள் நேரில் வந்து தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை அருகே எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் சந்தோஷ் (30). இவர் கடந்த 16 ஆம் தேதி தனது தாய் மலரிடம் மது போதையில் சாப்பாடு போட சொல்லி தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர் சஞ்சய் வீட்டின் அருகே ஹாலோ பிரிக்ஸ் கல்லை எடுத்து தலை மீது போட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாயார் மலர் கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலீசார் இன்று சஞ்சயை கைது செய்தனர்.
போடி, பொட்டிப்புர பொதுமக்கள் கடந்த ஏப்.19 அன்று அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தோ்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்புக்கொடியை தெருக்களில் கட்டியிருந்தனர். மேலும் தோ்தலை புறக்கணித்து தெருவில் அமா்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனா். தோ்தல் விதிகளை மீறி பதாகை கட்டியதாக தோ்தல் விடியோ கண்காணிப்புப் படை அலுவலர் அளித்த புகாரில் கிராம மக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் துணை மின் நிலையம் ராமேஸ்வரம் நகர்புறம், பர்வதம், ஓலைக்குடா, சம்பை, மாங்காடு, வடகாடு,
வேர்கோடு, புதுரோடு, செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, பேக்கரும்பு தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் ஏப்.24, 25-ல்
மின் பாதை மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.
24, 25-ல் காலை 8 மணி முதல் 4:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என
ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆலத்தியூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் முனுசாமி (33) என்பவர் தனியார் பால் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் ஊத்தங்கரை அருகே கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் விளையாட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று(ஏப்.21) ஒரு சில இறைச்சி கடைகள் மூடப்பட்டதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பல பகுதிகளை சேர்ந்த மக்கள் காசிமேடுக்கு மீன்களை வாங்க படையெடுத்து உள்ளனர்.
திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பவானி மற்றும் அந்தியூர் பகுதி கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கோவையில் இருந்து ஏப்.23 முதல் ஜூன்.25 வரை கோவை விடுமுறையை முன்னிட்டு கோவை – பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் , நெல்லூா், விஜயவாடா, முனிகுடா , சம்பல்பூா் , ரூா்கேலா, ஹாட்டியா, தன்பாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு இன்று விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்து வருகின்றனர்.
தென்காசி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.