India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய விமானப்படை அக்னிவீர் வாயு தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ள 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் . செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு செங்கல்பட்டு
மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுகவினர் ஓட்டுக்காக வேட்டி, சேலை வழங்க இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நுகர்வோருக்கு பொருள்கள் வாங்கும் போது விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் அஞ்சமின்றி ஜனநாயக கடமை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில் தொகுதியின் பதற்றமான பகுதிகளில் இன்று போலீசார், மத்திய ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். இந்த அணிவகுப்பு ஏடிஎஸ்பி திருமால் தலைமையில் நடைபெற்றது.
வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை, சேலம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை எஸ்.டி.சி/ஏ. அலுவலகம் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் ஆகிய 2 இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை மற்றும் கோவை அணிகள் மோதவுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் 1,303 முதன்மை மையங்கள், 169 குறு மையங்கள் என மொத்தம் 1472 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள
451 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 92 ஊட்டச்சத்து பெட்டகம் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 549 குழந்தைகளின் தாய்மார்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அமைச்சர் திருமுருகன் பரிந்துரையின் பேரில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்சத்திற்கான காசோலையை இன்று சந்தோஷின் குடும்பத்தாருக்கு வழங்கினார்கள்.
கோவை மாவட்டத்தில் குளம், குட்டைகளில் 83 இடங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 26ஆம் தேதி வரை வந்த விண்ணப்பங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம். மேலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தாலுகா அளவில் அனுமதி கொடுப்பதற்கான அரசாணை வந்திருக்கிறது. அதற்கான மொபைல் செயலி உருவாக்கும் பணி நடந்து வருகிறது என கோவை கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்க அரசு நிதியுதவி அளிக்க உள்ளது. பதிவு செய்யப்பட்ட தேவாலயங்களுக்கு தேவாலயம் நிறுவப்பட்ட ஆண்டுகளைப் பொறுத்து ரூ.20 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படுகிறது. எனவே தேவாலயத்தினர் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலை விவகாரத்தில், அந்த மக்களுக்கு ஆதரவாக ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக, புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று(ஜூலை 3) பேட்டியளித்துள்ளார். அப்போது, மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் என்றும், முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.