India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இன்று ( ஜூலை 3 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார்களை டி.ஓ. பென்ஷன் அதலாத் என தபால் உறையின் மீது எழுதி கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சேரும்படி வருகின்ற 8ஆம் தேதிக்குள் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கடந்த ஜூன்- 9 ஆம் தேதி மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர்அளித்த புகாரின் பேரில் விஜயபாஸ்கர் மீது புகாரளிக்கப்பட்டது.இதனையடுத்து விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு ஜூன்-12 அன்று மனுதாக்கல் செய்தார். இதன்பிறகு தலைமறைவான அவர் நேற்று முன்தினம் இடைக்கால முன்ஜாமீன் கோரியிருந்தார்.இந்த முன்ஜாமீன் மனு குறித்தான தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் ஆய்வு செய்யபட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் எஸ்.எஸ்.ஸ்ரீஜு மற்றும் அஜய் ரூமல் கார்டே ஆகியோர் ஜூன் 29 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் விரிசல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.பாஜக அமைச்சர்களுக்கு எதிராகவும்,முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான் குமார், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் சிவசங்கர் ஆகியோர் டெல்லியில் இன்று முகாமிட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 3 ) விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, அம்பை, ராதாபுரம் ஐடிஐ கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க வருகிற 15ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அலுவர்கள் மூலம் மாநகராட்சி அணையர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினார். கோவையின் முதல் பெண் மேயரான கல்பனா மற்றும் அவரது கணவன் ஆனந்தகுமார் மீது பல்வேறு புகார்கள் எழுந்து நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று(ஜூலை 03) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார். இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணைக்கு பின் அமலாக்கத்துறை மனுவை இன்று தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(ஜூலை 3) நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பொதுமக்களிடமிருந்து 48 மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார் உடன் இருந்தனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் மேற்கொண்டு, வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் தருகின்றனர். மேலும், அன்புமணி ராமதாஸ் கூட்டத்திற்கு வரவிடாமல், வாக்காளர்களை தடுத்து நிறுத்துவதாகவும், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாமகவினர் மற்றும் பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் ஆட்சியர் பழனியிடம் மனு அளித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.