Tamilnadu

News April 21, 2024

திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் 

image

திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஏப்,22, திங்கட்கிழமை) நடக்கிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறின் 4 வீதிகளிலும் தேர் வீதி உலா வருகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள் .

News April 21, 2024

சோளிங்கர் கோவிலில் தேரோட்டம்

image

சோளிங்கரில் அமைந்துள்ள அருள்மிகு யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு மகா தேரோட்டம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

News April 21, 2024

காரிமங்கலம் அருகே 13 பவுன் நகை கொள்ளை

image

காரிமங்கலம் ஏ முருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். கடந்த 19ம் தேதி காலையில் அவரது குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். மாலையில் அவரது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகை கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 21, 2024

திருவள்ளூர்: மரக்கன்று நடுவிழா

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தசரத நகரில் மரங்களின் காவலன் மற்றும் சிரிப்பு நடிகர் விவேக் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நேதாஜி சோசியல் ஆர்க், மற்றும் மர வங்கி சார்பில் இயற்கை வளத்தினை பாதுகாக்கவும் காற்று மாசுபாட்டினை தடுக்கவும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.  இதில் நேதாஜி சோசியல் ஆர்க் மர வங்கி தலைவர் ஸ்ரீதர் பாபு மற்றும் உடன் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்

News April 21, 2024

திண்டுக்கல்: போதிய விலை இல்லை

image

ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையகோட்டை பகுதியில் அதிகம் பயிரிடப்படும் முக்கிய பயிரான சூரியகாந்தி குறைந்த நீரில் மூன்று மாதங்களில் பயன் தரக்கூடிய இந்த பூவில் உள்ள விதைகளை வெளியூர் வியாபாரிகள் கிலோ 60- முதல் 70 வரை அவர்களே விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கிறனர் . இதனால் தங்களுக்கு போதிய விலை இல்லை எனவும் அரசே கொள்முதல் செய்தால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News April 21, 2024

தி.மலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்

image

சித்ரா பவுர்ணமி வரும் 23ஆம் தேதி காலை 4.16 மணிக்கு தொடங்கி ஏப்.24ஆம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் 23ஆம் தேதி முழுமையாக பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News April 21, 2024

மயிலாடுதுறையில் ஓட்டு சதவீதம்

image

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் பதிவான ஓட்டு சதவீதம் என்பது 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மயிலாடுதுறையில் 70.09 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2024

திருபத்தூர்: பெண்ணை கேலி செய்த 2 பேர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராமநாயக்கன் பேட்டை பகுதியில் வசிக்கும் திவாகர் சந்தீப் மற்றும் அரவிந்தன் ஆகியோர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்துள்ளனர். இதுகுறித்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் அம்பலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 21, 2024

தேனி: ஓட்டு போட சென்ற பெண் பலி

image

தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இதய நோயால் பாதிக்கப்பட்டு தினமும் தவறாமல் மருந்து சாப்பிட்டு வந்தார். கடந்த 19ஆம் தேதி ஓட்டு போடுவதற்காக சென்றபோது இதய நோய்க்கான மாத்திரை சாப்பிடாமல் சென்றுள்ளார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

News April 21, 2024

ஈரோடு: தமிழக எல்லையில் மீண்டும்

image

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவை தேர்தல் ஆணையம் கலைத்தது. ஆனால், கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் தமிழக எல்லையான அந்தியூர் அடுத்த பர்கூர் மற்றும் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!