India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ராமகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். சங்கிலிவாடி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்த கார் சாலை தடுப்புச் சுவற்றில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
தமிழக மாநில தேர்தல் ஆணையராக இருப்பவர் ஜோதி நிர்மலா சாமி. இவர் இன்று மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமியை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அரசு அதிகாரிகளும் அவரை வரவேற்றனர்.
விருதுநகர் கந்தபுரம் பகுதியைச் சார்ந்தவர் சேதுராமசாமி (67). இவரது மகள் ஹரிப்பிரியா(27). இவருக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலை தட்டச்சு பயிற்சி செல்வதாக கூறிச் சென்ற ஹரி பிரியா தற்போது வரை வீடு திரும்பவில்லை. எனவே மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் சேது ராமசாமி இன்று புகார் அளித்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் பிறந்தநாள் இன்று அதிமுக ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள அதிமுக அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சிந்தாமணி முத்துக்குமார் பிரம்மாண்ட போஸ்டர் அடித்து கொண்டாடினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த த.பெரியசாமியின் உடல் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி இன்று (21.04.2024) எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள அன்னாரது வீட்டிற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு கந்தூரி உள்ளிட்ட விழா காலங்கள் மட்டுமின்றி தினந்தோறும் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரிகர்கள் வந்து செல்கின்றனர்.
இப்படி சிறப்பு வாய்ந்த நாகூர் ஆண்டவர்கள் தர்காவின் நுழைவாயிலின் மேல் அமைந்துள்ள கடிகாரம் நீண்ட நாட்களாக ஓடாமல் நின்ற வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் கடிகாரத்தை ஒட செய்வார்களா என யாத்ரிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையை சேர்ந்தவர் சிவ மூர்த்தி. இவர், தனது நண்பர் வெங்கடேசனுடன் பைக்கில் மண்டலவாடி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சிவமூர்த்தி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி இவர் சிங்கப்பூரில் இருந்து வந்து சிவகங்கை அருகே வாணியங்குடியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியவீட்டில் மருது பாண்டியர்கள் சிலை வைத்துள்ளார். இன்று வீட்டிற்கு பால் காய்ச்சும் விழா நடக்க இருந்த நிலையில் சிவகங்கை போலீசார் வந்து சிலையை அகற்றிவிட்டு பால் காய்ச்சும்படி கூறியிருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
காஞ்சிபுரம் , காந்தி சாலை பகுதியில் காஞ்சி எழிலன் அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு தமிழ்நாடு தேர்வாணையம் பணிக்காக நடத்தும் தேர்வுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்து வருகின்றன. இதில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் விருப்பத்துடன் இலவச தேர்வு பயிற்சி பெற்று பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்று 50க்கும் மேற்பட்டோர் அரசு பணி பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
கீழவளவை சேர்ந்த நவீன்குமார்(32)க்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத் தேவன் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு நவீன்குமார் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்டது. இது குறித்து கீழவளவு போலீசார் வெள்ளையத் தேவன், மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன், பாலு ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வெள்ளைய தேவன் மற்றும் அசோக்கை இன்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.