Tamilnadu

News July 3, 2024

10ம் வகுப்பு துணைத் தேர்வு: 8ம் தேதி துவக்கம்

image

திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 180 பேரில் 27 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றனர். 2,301 பேர் தேர்ச்சி பெறவில்லை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் துணைத்தேர்வு வருகின்ற எட்டாம் தேதி 11 மையங்களில் நடைபெறுகின்றது. மொத்தம் 364 பேர் தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News July 3, 2024

மீனவர்கள் கைது – திருமாவளவன் கண்டனம்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாகவே கருதுவதில்லை. முதல்வரின் கடிதத்திற்கு மத்திய அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.

News July 3, 2024

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா

image

புதுக்கோட்டையில் 7வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமை வகித்து புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் மன்னர் கல்லுாரி விளையாட்டு திடலில் நடைபெறும்” என்றார்.

News July 3, 2024

நாகை மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 – 25ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள், நேரடியாக கல்லுரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 04365-250129 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

News July 3, 2024

திருவண்ணாமலை அரசு கல்லூரிகள் இன்று திறப்பு

image

திருவண்ணாமலை, அரசு கல்லூரியில் 2 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்று முதல் திறக்கப்படுகிறது. மேலும் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் கணேசன் தெரிவித்தார்.

News July 3, 2024

35 ஆயிரம் ரேஷன் கார்டுகளை நீக்க புதுச்சேரி அரசு முடிவு

image

புதுச்சேரியில் 3 லட்சத்து மேற்பட்ட மஞ்சள், சிவப்பு ரேஷன் கார்டுகள் உள்ளது. ரேஷன் கார்டு விநியோகத்தில் வறுமையானவர்கள் யார் என சரியாக கணக்கிடவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து கார்டுகள் தணிக்கை செய்யப்பட்டு, பிற மாநிலங்களில் உள்ள ரேஷன் கார்டுகளுடன் பெயர் விபரங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இதில் தகுதி இல்லாத 35 ஆயிரம் ரேஷன் கார்டுகள் வரை நீக்கப்படலாம் என தெரிகிறது.

News July 3, 2024

சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

image

திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற நடைமுறை உள்ளது. ஆனால், அதனை பின்பற்றாமல் சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News July 3, 2024

திருவண்ணாமலை துணைத்தேர்வு பலர் ஆப்சென்ட்

image

தி.மலை மாவட்டம், கடந்த ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 10,11ஆம் மாணவர்களுக்கு, துணைத்தேர்வு பல்வேறு மையங்களில் நேற்று முதல் தொடங்கியது. இதில் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 645 பேரும், 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 285 பேரும் நேற்று தேர்வு எழுத வரவில்லை. மேலும் தவறிய மாணவர்கள் தவறாமல் தேர்வு எழுதவேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி கேட்டுக்கொண்டார்.

News July 3, 2024

கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு 4000 பயனாளிகள் தேர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று(ஜூலை 2) 412 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்ய சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட முழுவதும் 4000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 3 தவணையாக ரூ 3.10 லட்சம் வழங்கப்படும். மேலும், பயனாளிகளுக்கு விரைவில் வீடு கட்ட ஆணை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News July 3, 2024

விஜய்யை பாராட்டிய செங்கல்பட்டு மாணவி

image

டாஸ்மாக் மூலம் மது அருந்துபவர்களை ஊக்குவிப்பவர்களுக்கு மத்தியில் நடிகர் விஜய் கல்வியை ஊக்குவித்து வருவதாக செங்கல்பட்டு மாணவி சுபிக்ஷ புகழாரம் சூட்டியுள்ளார். திருவான்மியூரில் நடைபெற்று வரும் த.வெ.க. ஊக்கத்தொகை வழக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், போதை பொருள்கள் இல்லாத சமூகத்தை விஜய் வலியறுத்தி வருவதாகவும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!