Tamilnadu

News January 10, 2026

தி.மலை: சம்பவ இடத்துலயே துடிதுடித்து பலி!

image

வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (54), நேற்று வந்தவாசி – திண்டிவனம் நெடுஞ்சாலையில் இளங்காடு கூட்ரோடு அருகே சாலையைக் கடந்தபோது, அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பொன்னூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமாரின் மனைவி கலைமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

சென்னை: 4 பேர் அதிரடி கைது!

image

குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை கயல்விழி என்பவரிடம் ரூ.38.88 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் 15-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2.12 கோடி வரை மோசடி செய்தது அம்பலமானது. கைதான ஜோஸ்பின் பியூலா, சித்ரா, கார்த்திகேயன் மற்றும் தினகரன் ஆகியோரிடமிருந்து போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 10, 2026

தாம்பரம்: 3 பேர் அதிரடி கைது!

image

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா மற்றும் ஹெராயின் கடத்திய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சரோஜ் குமார் (51), சகஜான் (31), ரகுமான் (38) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

News January 10, 2026

திருச்சி: புதிய ஐஜி பொறுப்பேற்பு

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக (ஐஜி) இருந்து வந்த நிர்மல் குமார் அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னையில் நிர்வாக பிரிவு ஐஜி ஆக இருந்து வந்த பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக பாலகிருஷ்ணன் நேற்று (ஜன.9) பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தருமபுரி: பிரிந்த மனைவி; கணவன் விபரீத முடிவு!

image

பாப்பிரெட்டிப்பட்டி, கர்த்தானூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தவர் முருகன் (45). மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனவேதனையில் இருந்த இவர், தான் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபிநாதம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்: மணல் திருடியவர் அதிரடி கைது!

image

வேலூரை அடுத்த சேக்கனூர் கிராமத்தில் அருகே கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிலிக்கான் (தாது மணல்) கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சுந்தர் (48) தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News January 10, 2026

விழுப்புரத்தில் பட்டப்பகலில் துணிகரம்!

image

விழுப்புரம்: பிள்ளைச் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மு.பூரணி (45). இவர் தனது பைக்கில் பொம்மையாா்பாளையம் நோக்கி நேற்று சென்றுள்ளார். அப்போது, பைக்கில் பின்னால் வந்த தலைக்கவசம் அணிந்திருந்த மர்ம நபர், பூரணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!