India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோட்டில் திருவள்ளுவர் தினம் (ம) குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் தினம் (ஜன.16) (ம) குடியரசு தினத்தை (ஜன.26) முன்னிட்டு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் 2 நாள்கள் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திண்டிவனம், பாதிரியில் NH சார்பில் தடுப்பு கட்டைகள் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த வழியாக வந்த டிப்பர் லாரி அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆஷித் (18), ராஜேஷ் ஷியாம் (30), கணேஷ்குமார் (60), மனோஜ் பேட்டா (36), போலன் முக்கியா (31) ஆகியோர் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த லாரி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இது குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் வருகிற 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் , 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த தினங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் மூடப்படுவதாக மாவட்ட கலெக்டர் கலைச் செல்வி மோகன் தெரிவித்துள்ளார். அத்துமீறி மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு(23). இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி. நேற்று முன் தினம் சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் அந்தத் தெருவில் நடந்து சென்ற 6 பேரை கண்மூடித்தனமாக கத்தியால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சந்துரு, அரவிந்த்(23), செல்வரசு(27) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் இரு ஆண்டுகளாக முதலிடம். மூன்று ஆண்டுகளில், 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், 2025ல் மட்டும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 16 வழக்குகளில் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெறபட்ட 20 அரசு அலுவலர்கள், 2 புரோக்கர்கள் என 22 பேர் கைது செய்யபட்டனர்.

கரூரில் திருவள்ளுவர் தினம் 16.01.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் குடியரசு தினம் 26.01.2026 (திங்கள்கிழமை) ஆகிய தினங்களில், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர்தினமாக (DRY DAY) அனுசரித்து கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்துடன் (TANFINET) இணைந்து நாகை மாவட்ட கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த திருச்சின்னபுரத்தை சேர்ந்தவர் உதயச்சந்திரன் (48). ஓ.என்.ஜி.சி. நிறுவன தொழிலாளியான இவர் தனது மனைவி பழனியம்மாளுடன்(38) பைக்கில் வீராணம் ஏரிக்கரை வழியாக சென்றபோது எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்த உதயசந்திரன் நேற்று உயிரிழந்தார். படுகாயமடைந்த பழனியம்மாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.