Tamilnadu

News January 13, 2026

கள்ளக்குறிச்சி: பெண்ணிற்கு போலீஸ் பாலியல் தொல்லை!

image

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 32 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கடந்த ஓராண்டுக்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலரான ஷேக் சலீமிற்கு இவர் அறிமுகமாகி பேசி வந்த நிலையில், அந்தப் பெண்ணிற்கு முதல் நிலைக் காவலர் ஷேக் சலீம் பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

News January 13, 2026

மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் வரும் ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்) அன்று முழுவதுமாக மூட வேண்டும் என்றும், இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை..

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இன்று செவ்வாய்க்கிழமை (ஜன-13) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இளையான்குடி புதூர், தாயமங்கலம், கண்ணமங்கலம், திருவள்ளூர், சாத்தனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தங்கள் பணிகளை மாற்றியமைத்து கொள்ளுங்கள். SHARE IT..

News January 13, 2026

திருப்பூரில் ட்ரோன் பறக்க தடை

image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் ஜன.14, 15 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் கணக்கம்பாளையம் மற்றும் பிச்சம்பாளையம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி அப்பகுதியில் ட்ரோன் பறக்க தடை விதித்து கலெக்டர் நாரணவரே மனீஷ் ஷங்கர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

ராஜபாளையம்: ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ்காரர்

image

ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது பெண்ணின் கணவர் புகார் அளிப்பதற்காக புளியங்குடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவர் அவரின் செல்போனை பறித்து அப்பெண்ணின் செல்போன் எண்ணிற்கு 29 ஆபாச வீடியோக்கள், ஆபாச குறுச்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பெண் கலெக்டரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 13, 2026

நெல்லை: தூக்கி செல்லப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்

image

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒரு மாற்றுத்திறனாளி நியமன மாமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று சக்கர வாகனத்தில் வரும் அவர் மேல் தளத்தில் உள்ள மாமன்ற கூட்டத்தை அரங்கிற்கு செல்வதற்கு சரியான வசதிகள் இல்லாத நிலையில் ரெண்டு பேர் உதவியுடனே மேலே செல்லும் அவலம் உள்ளது.

News January 13, 2026

பெருமாள் அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற மார்கழி நீராட்டு விழா டிச. 20-ம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. இதில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் முடிந்த நிலையில், எண்ணெய் காப்பு உற்சவம் ஜன.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று திருமுக்குளம் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் முத்தங்கி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

News January 13, 2026

அருமனையில் 2 முதலைகள் நடமாட்டத்தால் பீதி

image

களியல் கோதையாறில் முதலை பீதி அகலாத நிலையில் தற்போது அருமனை அருகே கல்லுவரம்பு கோதையாறு பகுதியில் 2 முதலைகள் நடமாடியதை பார்த்து சிலர் அதனை படம் பிடித்துள்ளனர். இந்த முதலைகள் பாறை மீது கிடப்பதை போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரு கிறது. இதனால் அம்பலக்கடை, கொக்கஞ்சி, கோட்டக்ககம் பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் . முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 13, 2026

சென்னையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

image

செம்பியம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதே குடியிருப்பில் வசிக்கும் ஐடி ஊழியர் கந்தசாமி (40), ஜெபம் செய்வதாக கூறி அழைத்து சென்று, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிட்டு தப்பித்து பெற்றோரிடம் தெரிவிக்க, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கந்தசாமியை நேற்று கைது செய்தனர்.

News January 13, 2026

பழனி சென்ற பெண் பக்தர் பலி!

image

திருப்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனைத் தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி அருகே பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!
↑