India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கும், அவரது அண்ணன் குருவையாவுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் குருவையா மகன் வீரகுருவை கடந்தாண்டு பாலசுப்பிரமணியனின் மகன் வீரபாண்டி, மருமகன் முனியசாமி சேர்ந்து கொலை செய்தனர். இதையடுத்து பொங்கல் பரிசு வாங்க சென்றபோது பாலசுப்பிரமணியத்தை குருவையா மகன் சஞ்சய்குமார் அருவாளால் வெட்ட முயன்ற நிலையில் கூமாபட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த முருகன் மனைவி மாடத்தி (40) என்பவர், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஜன.07ந் தேதி கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தார். விபத்தில் சிக்கினாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா எனச் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்கிழக்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி, எரங்காட்டு கொட்டாயை சேர்ந்தவர் ஆறுமுகம் (47) மருந்துக்கடை ஊழியராக உள்ளார். இவருக்கு ஜோதி என்கிற மனைவியும் 2 மகன்கள் & 2 மகள்கள் உள்ளனர். ஜன.7ம் தேதி மதிகோன்பாளைய ஏரியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தருமபுரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜோதிக்கும் அவரது மருமகனான சீதாராமனும் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது. இதனை ஆறுமுகம் கண்டித்ததால், ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திடீர் ஆய்வில் ஈடுபட்டார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம், கணவாய்புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜாலிகொட்டாய் பகுதியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியக் கலந்தாய்வு மற்றும் இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் தவெவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களைத் தவெக நிர்வாகிகள் துண்டு அணிந்து வரவேற்றனர்.

பெரிய ஜோகிப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (52) நேற்று முன்தினம் (ஜன.12) தனது சித்தியான முருகம்மாளுடன் (54) துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு சாமல்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி – தி.மலை NH-இல் பின்னால் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முருகம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து மத்தூர் போலீசார் விக்னேஷ் (27) எனபவரை கைது செய்தனர்.

தென்காசியை சேர்ந்த குருசாமி (64) குடும்பத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று (ஜன.12) நாகர்கோவில்-சென்னை ரயிலில் பயணித்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்த போது அவர் சுயநினைவின்றி இருந்ததை அறிந்த குடும்பத்தினர் அவரை நடைமேடையில் அமர வைத்தனர். அவரை சோதித்த ரயில்வே மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு, கோவளம் பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் மையமும், தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர் சாகச சவாரியை ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுற்றுலா பயணிகளுக்கான சாகச ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை தொடங்கி வைத்தார். இது 8 நாட்கள் நடைபெற உள்ளது.

வளநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் இறந்த நிலையில் 4 மயில்கள் கிடந்துள்ளன. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பசாமி, திருப்–பதி, கார்த்திக், பரத்குமார், கருப்பையா ஆகி–யோர் மயில்களை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.