Tamilnadu

News January 13, 2026

ஈரோடு: அவுட்டுக்காய் கடித்து குட்டி யானை உயிரிழப்பு

image

ஈரோடு, கடம்பூர் வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ‘அவுட்டுக்காய்’ கடித்ததில் வாய் மற்றும் தாடைப் பகுதி சிதைந்து யானை உயிரிழந்தது உறுதி செய்தனர். இது தொடர்பாக காளிமுத்து (53) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 13, 2026

செங்கை: புழுதி பறந்த கார் – பீதியில் மக்கள்!

image

மறைமலை நகர் நகராட்சி 8-வது வார்டில், நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம், காலை & மாலை நேரங்களில் அதிக அளவில் கூட்டம் நிறைந்து காணப்படும். இதில் நேற்று மாலை இரண்டு கார்களில் வந்த, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அதிக வேகமாக கார்களை இயக்கி மைதானத்தில் புழுதி பறக்க சாகசத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று வாகனங்களை ஓட்டுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.

News January 13, 2026

நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

நாகை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (ஜன.16) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

News January 13, 2026

தஞ்சை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

image

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (49). இவரது வீட்டில் கடந்த கடந்த 4.7.2025 அன்று கதவை உடைத்து உள்ளே புகுந்த அமர்நாத் (24), சுகுமார் (28) ஆகியோர் வீட்டில் இருந்த 41 பவுன் தங்க நகைகள், ரூ.50,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இவ்வழக்கு நேற்று தஞ்சை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News January 13, 2026

மருதமலைக்கு காரில் செல்ல தடை

image

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன.15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலுக்கு காரில் மலை மேல் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பக்தர்கள் மலைப்படிகள் மற்றும் கோயில் பேருந்து வாயிலாகவும் மலைக்கு செல்லலாம். (இத்தகவலை SHARE பண்ணுங்க)

News January 13, 2026

கிருஷ்ணகிரி: விபத்தில் மூதாட்டி பலி!

image

பந்தாரப்பள்ளி, ஓசூர்-கிருஷ்ணகிரி NH-ல் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாகி அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருகின்றனர்.

News January 13, 2026

விழுப்புரத்தில் இளம்பெண் தற்கொலை!

image

திண்டிவனம் தீவனூர் கிராமத்தை சேர்ந்தவர் புனிதா. இவருக்கும் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதி சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 4 மாத கைக்குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News January 13, 2026

உஷார்..கரூரில் இங்கெல்லாம் மின்தடை!

image

கரூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று(ஜன.13) மின் பராமரிப்பு பணி காரணமாக சின்னப்பனையூர், ஆலத்துார்,களத்துப்பட்டி,செம்மேடு,ரெங்காச்சிபட்டி,பாரதி நகர்,புரசம்பட்டி, இந்திரா நகர், வீராச்சிபட்டி, பனையூர், நெய்தலுார் காலனி சேப்ளாப்பட்டி, கட்டாணிமேடு,நெய்தலுார்,ராமாயி பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News January 13, 2026

நாமக்கல்லில் அதிரடி காட்டிய அதிகாரிகள்!

image

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் 2024 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 51 கடைகள், 2 உணவகங்கள் மற்றும் 200 இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஓராண்டாக வாடகை செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைக்கவும், கடைகளின் உரிமையாளர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்க்கவும், அவர்களின் முன்வைப்புத் தொகையில் வாடகையைக் கழித்துக்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

News January 13, 2026

தி.மலை: விபத்தில் வாலிபர்கள் பலி!

image

தி.மலை, மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய் (25) மற்றும் விக்னேஷ் (16) நண்பர்களான இருவரும் மட்டபிறையூரிலிருந்து மொடையூர் கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!
↑