Tamilnadu

News January 15, 2026

திருவள்ளுர்: வருங்கால கணவர் கண்முன்னே துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: செங்குன்றத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (25), அசோக்குமாருக்கும் (26) 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது முன்னால் சென்ற ஆட்டோ திடீர் பிரேக் போட்டதால், நிலைதடுமாறி வைஷ்ணவி கீழே விழுந்தார். அதேசமயம் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதால், அசோக்குமார் கண் முன்னே அவர் தலை நசுங்கி பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

கள்ளக்குறிச்சியில் பகீர் – இளம்பெண் கடத்தல்!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியள்ளனர். அப்போது, புதுப்பாலப்பட்டை சேர்ந்த மணிவேல் (30) அந்த பெண்ணை கடத்திச் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், மணிவேல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

தஞ்சை: பொங்கல் சீர் கொண்டு சென்றவர் பரிதாப பலி

image

ஒரத்தநாடு சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு (49), தனது குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு பொங்கல் சீர் கொடுக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சிற்றம்பலம் அம்மாகுளம் அருகே எதிரே வந்த கார் மோதியதில், திருநாவுக்கரசு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 15, 2026

செங்கை: நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த கார்

image

செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திருப்போரூர் செல்வம் சாலை, திருவடிசூலம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் காரில் பயணம் செய்த 4 பேரும் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 15, 2026

மதுரை: சொத்து தகராறில் தந்தை வெட்டிக் கொலை

image

திருமங்கலம் தும்மக்குண்டடை சேர்ந்தவர் மனோஜ் என்ற மனோகரன்(55). இவருக்கும் இவரது மகன் சக்கரவர்த்திக்கும் (32), தும்மக்குண்டில் உள்ள இடத்தில் விவசாயம் செய்வது குறித்தும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சக்கரவர்த்தி தான் வைத்திருந்த அரிவாளால் தந்தையின் கழுத்து காலில் வெட்ட அவர் உயிரிழந்தார். தும்மக்குண்டு விஏஓ முருகன் அளித்த புகாரில் சிந்துபட்டி போலீசார் அவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

News January 15, 2026

ஜோலார்பேட்டையில் போலீசார் மீது பைக் மோதல்

image

ஜோலார்பேட்டை போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலிசார் (ஜன.13) ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் சேர்ந்த வசந்த் (வயது 28) என்பவர் சோதனையில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து நேற்று (ஜன.14) ஜோலார்பேட்டை போலிசார் சப் இன்ஸ்பெக்டர் மீது மோதிய வசந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

News January 15, 2026

ராஜபாளையத்தில் இன்ஸ்பெக்டர் கைது

image

ராமநாதபுரம் மண்டபம் இன்ஸ்பெக்டர் சத்யசீலா ஸ்ரீவியில் நடந்த கொலை வழக்கில் ராம்குமார் என்பவருடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்த மாலதி(35) என்பவர் தன்னிடம் 33 பவுன் நகையை மோசடி செய்ததாக அளித்த புகாரில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி ராம்குமார், சத்யசீலா ஆகியோர் மாலதியை மிரட்டிய நிலையில் சத்யசீலாவை போலீசார் கைது செய்தனர்.

News January 15, 2026

குமரி: பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஸ்வின். தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் நேற்று முன் தினம் மாலை நண்பருடன் பைக்கில் சென்றார். அப்போது கொல்லங்கோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த கூண்டு வாகனம் பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த அஸ்வின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

ராணிப்பேட்டை: தாய் தூக்கிட்டு தற்கொலை!

image

வளையாத்தூர் கிராமம், அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் யோகலட்சுமி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று (ஜன.14) குடும்ப பிரச்சினையினால் மனமுடைந்த இவர் வீட்டில் தூக்குமாட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

நெல்லை: துப்பாக்கி விற்பனையில் மேலும் 2 பேர் கைது

image

மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையை சேர்ந்த திமுக பிரமுகரான ரத்தினம் பாலா(40) துப்பாக்கி பதுக்கி விற்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அமீர் சுகைல், முசாம்பீர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் விரைந்த போலீசார் சாகுல் ஹமீது, சிக்கந்தர் ஷேக் ஒலி ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!
↑