Tamilnadu

News January 15, 2026

காங்கேயம் அருகே கோர விபத்து

image

காங்கேயம் அருகே கோபியைச் சேர்ந்த முருக பக்தர்கள் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில், கார்த்திக் என்பவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 15, 2026

ராம்நாடு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

ராம்நாடு மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் செய்து<<>> இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

திருவாரூர்: தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சொரக்குடி, மூங்கில்குடி, விசலூர், காக்காகோட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரை விமானம் ஒன்று தாழ்வாக பறந்தது. இவ்விமானம் பல்வேறு கிரங்களில் மிகவும் தாழ்வாக பலத்த சத்தத்துடன் தென்னை மரங்களை தொட்டும் செல்லும் அளவிற்கு பறந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது. பின்னர், அது பயிற்சி விமானம் என தெரிய வந்தது.

News January 15, 2026

குமரி: NO EXAM… போஸ்ட் ஆபீஸில் வேலை ரெடி..!

image

குமரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

ஸ்ரீவி: கனவில் கேட்டதால் 45 பவுன் நகையை வழங்கிய பெண்

image

சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் கடந்த வாரம் ஸ்ரீவி ஆண்டாள் தோன்றி உன் நகைகளை எனக்குத் தா, என கேட்டதால் பச்சைக்கல் பதித்த 2 தங்க மாலைகள்,ஒரு சங்கு பதக்க மாலை உட்பட 45 பவுன் தங்க நகைகளை ஆண்டாளுக்கு அப்பெண் சமர்ப்பித்தார். நேற்று அப்பெண் கொடுத்த தங்க நகைகள் சாற்றப்பட்டு தங்க பல்லக்கில் தங்க கவசம் அணிந்து ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவத்திற்கு புறப்பாட்டார்.

News January 15, 2026

நாமக்கல்: ஜல்லிக்கட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள்<> namakkal.nic.in <<>>என்ற இணையதளத்தில் ஜனவரி 15 காலை 8 மணி முதல் 17-ம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

பெரம்பலூர்: மல்லிகை பூ கிலோ. 12 ஆயிரம் – மக்கள் அதிர்ச்சி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்கின்றன்ர். தற்போது குளிர்க்காலம் என்பதால் பூக்களின் விளைச்சல் குறைவாக உள்ள நிலையில், நேற்று பொங்கலை முன்னிட்டு மக்கள் பூக்கள் வாங்க குவிந்தனர். இந்நிலையில் பூக்களின் வரத்த் குறைந்து காண்ப்பட்டதால் மல்லிகை பூ கிலோ ரூ.12 ஆயிரத்திற்கும் முல்லை ரூ.2500, கக்கட்டான் ரூ.1000க்கும் விற்பனையானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

News January 15, 2026

நத்தம் அருகே வசமாக சிக்கிய மூவர்!

image

நத்தம் காவல் ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் குட்டுபட்டி – பாலப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரன் (30), பெருமாள் (23) மற்றும் ஆறுமுகம் (23) ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணம் மற்றும் சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 15, 2026

நாமக்கல்லில் தகாத உறவால் அரங்கேறிய பகீர் சம்பவம்!

image

நாமக்கல் அருகே பேளுக்குறிச்சியில், சங்கீதா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்த ஆட்டோ டிரைவர் கதிரவனை, அப்பெண்ணின் 17 வயது மகன் கோடாரியால் சரமாரியாக வெட்டினார். இதைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கதிரவனின் தாய் ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கதிரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 15, 2026

தொழில் தொடங்க வாய்ப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்துடன் (TANFINET) இணைந்து நாகை மாவட்ட கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
↑