India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 டூவீலர்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 58 வாகனங்கள் வரும் ஜன.21-ம் தேதி மயிலாடுதுறை டிஎஸ்பி முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 21.01.2026 அன்று காலை 6 மணி முதல் 9 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஐந்தருவியில் எப்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஐந்தருவியில் 5 கிளைகளிலும் கொட்டும் நீரில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அச்சமின்றி குளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் தினமான இன்று ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோவிலூரை சேர்ந்த கார்பெண்டர் காணிக்கைராஜ் (51). இவர் கடந்த 4-ம் தேதி இரவு ராமநாதன் (70), அஜித் (25), முரளி (42) ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட தகராறில் முரளி, குமார் இருவரும் காணிக்கைராஜை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த இவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜன.13) உயிரிழந்தார். இதை தொடர்ந்து போலீசார் குமார், முரளி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கோட்டச்சேரியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட 2.3/4 சவரன் நகையை 6 மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மர்ம நபர்கள் கரூரில் பதுங்கிருப்பதாக தகவல் கிடைத்தன்பேரில், அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த வேதவன்(40), பாலசுப்ரமணியன்(19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேங்கிடகுளம் குளத்துக்கரை அருகே வந்த சரக்கு வாகனத்தை சோதை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையெடுத்து வாகனத்தில் வந்த அய்யப்பன்(35), முருகராஜ்(37) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன சரகம் சாரங்கல் வன பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் யானை தந்தங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற மணி, சின்னத்தம்பி, ஆறுச்சாமி ஆகிய 3 பேரையும் நேற்று ஜன.14 கைது செய்தனர். தொடர்ந்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கும், அதனுடன் இணைந்த பார்களுக்கும், எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்களுக்கும் நாளை ஜன.16ஆம் தேதி மற்றும் வருகிற ஜன.26ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் இயங்காது என கலெக்டர் மிருணாளினி அறிவித்துள்ளார். மேலும் அன்றைய நாட்களில் இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலார்கள் நலவாரியத்தின் மூலம் உதவித்தொகை பெற்று அல்லது பெற விண்ணப்பித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அரியலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தரிவித்துள்ளார்.

திண்டுக்கல், சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில், வெள்ளோடு மற்றும் அடியனூத்து ஊராட்சிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். கட்சி நிர்வாகி உதயகுமார் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கட்சியில் இணைந்த இளைஞர்கள் நத்தம் விஸ்வநாதனுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

திண்டிவனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் (27), கடலூரைச் சேர்ந்த வாலிபர் துரைராஜும் சென்னையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி துரைராஜ் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், திடீரென அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்த துரைராஜ் திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். இதுகுறித்த வழக்கில் போலீசார் துரைராஜை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.