Tamilnadu

News January 15, 2026

திருப்பத்தூரில் மேஸ்திரி மர்ம மரணம்!

image

ஆதியூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கார்த்திகேயன் (43). இவர் நேற்று (ஜன.14) அப்பகுதியில் உள்ள தென்னை மரத்தின் கீழே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

ராணிப்பேட்டை: போதையில் கணவன் வெறிச்செயல்!

image

கலவையை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ஆறுமுகம் (65). இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வீட்டில் போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் மனைவியின் கையை வெட்டினார். இதனால் வலியால் அலறி துடித்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

News January 15, 2026

கிருஷ்ணகிரி: பதற்றத்தால் பறிபோன உயிர்!

image

சோடத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்த மேஸ்திரி, பிரபாகரன் (22). இவர் நேற்று (ஜன.14) மாலை பைக்கில் ஊத்தங்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கொடமாண்டபட்டி கூட்டு ரோட்டில் முன்னால் சென்ற வாகனம் திடீரென வளைந்தது. இதனால் பதற்றமடைந்த பிரபாகரன் செய்வதறியாது, நிலைதடுமாறி சாலையோர சுவர் மீது மோதினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 15, 2026

வாழப்பாடியில் பயங்கர விபத்து: டிரைவர் கைது!

image

வாழப்பாடி அருகே கருமாபுரம் பத்தாங்கல் மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, அவ்வழியே வந்த சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் சின்ன பிள்ளை (60) மற்றும் அவரது மருமகள் காயத்ரி (35) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் விபத்து ஏற்படுத்திய பேளூரை சேர்ந்த சபரி(33) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்

News January 15, 2026

உதகை அருகே விபத்து

image

உதகையிலிருந்து மைசூர் நோக்கி நேற்ற பிக்கப் வேன் ஒன்று கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் சிக்கியது. வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஓட்டுநர் சாலையோர தடுப்பு சுவரில் மோதி வாகனத்தை நிறுத்தினார். இவ்விபத்தில் ஓட்டுநர் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 15, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும், பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் வரும் ஜன.24-ந் தேதி, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் கடை, பொருட்கள் அல்லது சேவைகள் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News January 15, 2026

அவனியாபுரம் ஜல்லிகட்டு முதல் சுற்றில் 11 பேர் காயம்!

image

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் முதல் சுற்றில் மஞ்சள் பனியன் அணிந்து வீரர்கள் களமிறங்கினர். முதல் சுற்று 8.30 மணிக்கு முடிவடைந்தது. இதில் 5 மாட்டின் உரிமையாளர்கள், 6 மாடுபிடிவீரர்கள் என மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதில் தேனியை சேர்ந்த அஜய் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

News January 15, 2026

கிருஷ்ணராயபுரத்தில் வசமாக சிக்கிய நபர்!

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாணிக்கம் (52). இவர் அப்பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து உள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற மாணிக்கம் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

News January 15, 2026

தேனி: இலவச பேன்சி ஜூவல்லரி டிசைனிங் பயிற்சி.. APPLY

image

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஜன.28 முதல் பிப்.9 வரை சான்றிதழுடன் கூடிய பெண்களுக்கான இலவச Fancy Jewellery Designing பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜன.28க்கு முன் பயிற்சி மையத்தில் ஆதார் நகல், புகைப்படம் வழங்கி விண்ணப்பிக்கலாம். தங்குமிடம், உணவு இலவசம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News January 15, 2026

அரியலூர்: 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கும், அதனுடன் இணைந்த பார்களுக்கும், எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்களுக்கும் நாளை ஜன.16ஆம் தேதி மற்றும் வருகிற ஜன.26ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் இயங்காது என கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். மேலும் அன்றைய நாட்களில் இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!
↑