India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா வரும் ஜன.22-ம் தேதி முதல் பிப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். அதில் ஒன்றியத்திற்கான பரிசுத் தொகையாக முறையே முதல் 3 இடங்களுக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 மற்றும் மாவட்டத்திற்கு ரூ.6,000, ரூ.4,000, ரூ.2,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்

சேத்துப்பட்டு பேரூராட்சி நல்லதண்ணீர் குளத்தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (60), விவசாயி. நேற்று காலை மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச் சென்ற போது, போளூரில் இருந்து வந்தவாசியை நோக்கி வந்த ஒரு அரசு பஸ் ராஜ் மீது மோதியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு சொந்தமான 3 மாடுகள், ஒரு கன்றுக்குட்டி ஆகியவை பலத்த காயம் அடைந்தன. இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ என்பவருடன் பழகி வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பெற்ற சைஜூ, இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் சைஜூவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரிலிருந்து கேரளாவுக்குச் சுற்றுலாச் சென்ற இளைஞர்களின் வேன், விழுப்புரம் அருகே இருவேல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரவீன்குமார், கிஷோர், ஜெயப்ரகாஷ் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு காவல் நிலையத்தில் 2 கொலை, 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி அமலராஜ், 2026 ஜனவரி 13 இரவு வேலூர் காட்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். மது போதையில் இருந்த அவர், தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய வருவதாகக் கூறி சரணடைந்தார். பின்னர், தகவலறிந்த செங்கல்பட்டு போலீசார் விரைந்து வந்து, அமலராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

விழுப்புரம்: பெரியார் நகரைச் சேர்ந்த நிர்மல் குமார், மலேசியாவில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திரா பெரியார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில், இந்திரா தனது வீட்டை பூட்டிவிட்டு, நேற்று வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியில், யுவராஜ் என்பவர் ATM-ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவரை அணுகிய 3 வடமாநில நபர்கள், உதவி செய்வது போல நடித்து ATM-ல் பணமில்லை என தெரிவித்து வேறு ATM கார்டை கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் அவர் சென்றதும், அதே ATM கார்டை வைத்து ரூ.43,000 வரை எடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் போர்வை விற்பனையாளர்கள் மூவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் 90 கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

கூத்தக்குடியை சேர்ந்த அலெக்சாண்டர் (35), தனது மனைவியை கூப்பிட நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (17) & 2 பேர் வந்த பைக், அலெக்சாண்டர் பைக் மீது மோதியது. இதில் அலெக்சாண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ஸ்ரீகாந்த் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வினோத் (15). இவர் நேற்று கலை காசிமேட்டில் உள்ள கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கடலின் ஆழமான பகுதியில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயமானார். தகவலறிந்து வந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்பிடித் துறைமுக போலீசார், நேற்று மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல் கிடைக்காத நிலையில், இன்றும் உடலை தேடி வருகின்றனர்.

அரியநாச்சியில் நேற்று சாலை <<18859688>>விபத்தில் <<>>இறந்தவரை பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் 4 பேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அரியநாச்சி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியதில், வசந்தா (55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரே நாளில் அரியநாச்சி பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.