India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகளுக்கு மழை வெள்ள காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தமைக்காக அரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் நாளை மறுதினம் (ஜூன் 20) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடக்கவிருக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மதுரை, திருமங்கலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஒன்றும் தேச விரோதமில்லை . மேலும், தோல்வி பயத்தின் காரணமாகவே, அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை” எனக் கூறி அதிமுகவை பின்னடைவை சந்திக்க வைக்க நினைக்கும் எதிரிகளின் திட்டத்தை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.
தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை மூலம், அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள புதிய வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள் TNDIPR, Govt. of Tamil Nadu என்ற வாட்ஸ்அப் சேனலில் இணைந்து அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணி முதல் இன்று(ஜூன் 18) அதிகாலை 5.30 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்படி, பூந்தமல்லியில் 100 மி.மி, ஆர்.கே.பேட்டையில் 72 மி.மீ, ஆவடியில் 67 மி.மீ, திருவள்ளூரில் 47 மி.மீ, திருவேலங்காட்டில் 46 மி.மீ, பள்ளிப்பட்டில் 20 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 4 மணி நேரத்தில் 503 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த திருமலாபுரம் கிராமத்தில், குலசேகரப்பேரி கண்மாய்க்கு மேற்கே தொல்லியல் மேடு அமைந்துள்ளது. சமீபத்தில், திருமலாபுரம் மற்றும் உள்ளார் பகுதியில் இருந்து மேற்கு பகுதியில் 5 கிலோமீட்டர் தொலைவில், தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, இங்கு அகழாய்வு பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி கட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ் ஆபாச விடியோவை காட்டி பணம் பறித்த வழக்கில் மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை பிரகாஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலும் எஸ்பி மீனா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பிரகாஷை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி மாணவர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி வளைவில் தொடங்கிய இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தண்ணீர் இல்லாமல் போனதுக்கு என்ன காரணம் குறித்து மத்திய, மாநில அரசுகல் ஆராய வேண்டும் என்றும், கடந்தாண்டு முதல் ஏறத்தாழ 90 TMC-க்கு மேல் தண்ணீர் பாக்கி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள இந்த முகாமில், படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.