Tamilnadu

News June 18, 2024

நலத்திட்ட உதவிகளை வழங்கிய சுகாதாரத்துறை அமைச்சர்

image

திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவம் சார்ந்த பல்வேறு கட்டிடங்களை திறந்து வைப்பதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News June 18, 2024

விடுமுறை தினத்தில் படையெடுத்த சுற்றுலா பயணிகள்

image

தொடர் விடுமுறையையொட்டி குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை அதிகமான சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக, 15-ம் தேதி 7 ஆயிரம் பேரும், 16ஆம் தேதி 7 ஆயிரத்து 300 பேரும், பக்ரீத் பண்டிகை நாளான நேற்று 6 ஆயிரத்து 300 பேரும் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். 3 நாட்களில் மொத்தம் 20 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

மத்திய அமைச்சரை வரவேற்ற பாஜக மாவட்ட தலைவர்

image

இந்திய பிரதமர் மோடி நாட்டின் விவசாயிகளுக்கு பி.எம்‌ கிஷன் தொகையினை இன்று விடுவிப்பதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மத்திய தொழிலாளா் நலன்,வேலைவாய்ப்புத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேயை, நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் M.ராஜேஷ்குமார் பொன்னடை போர்த்தி வரவேற்றார்.

News June 18, 2024

திருத்துறைப்பூண்டி: நடிகர் சிவகார்த்திகேயன் வருகை

image

திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமனின் சிகிச்சை நேரத்தில் அவருக்கு உதவியாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன், வரும் 22ஆம் தேதி நடைபெற இருக்கும் நெல் ஜெயராமன் நினைவு நெல் திருவிழாவிற்கு வருகை தர இருப்பதாக, அவ்விழா ஒருங்கிணைப்பாளர் செ.ராஜீவ் தெரிவித்துள்ளார். அதற்கான விழா ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

திருச்சியில் நாளை மின் தடை

image

திருச்சியில் நாளை (19.06.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தென்னூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்தார்.

News June 18, 2024

ஒரே வாரத்தில் ரூ 5 கோடி அதிகரிப்பு ! ஏறுமுகத்தில் தேயிலை ஏலம்

image

நீலகிரி தேயிலை ஏலத்தில், வரத்து விற்பனை ஏற்றம் கண்டு ஒரே வாரத்தில், 5.25 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த வாரத்தை விட 3.20 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. மேலும் 2.59 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது.இதனால் 90.66 சதவீதம் தேயிலை தூள் விற்றது. டீ தூள் ஏலத்தில் சராசரி விலை கிலோவுக்கு ரூ.105 கிடைத்துள்ளது. இதன் காரணமானாக வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

News June 18, 2024

புதுச்சேரி: வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும்

image

புதுவை ஆளுநர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை திட்டக்குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளேன். முதல்வரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். வரும் பட்ஜெட் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

News June 18, 2024

தாம்பரம்: சாலையோர வியாபாரம் குறித்து ஆலோசனை கூட்டம்

image

தாம்பரம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறின்றி சாலையோரம் வியாபாரம் குறித்து கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகர் சங்க நிர்வாகிகள், குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

News June 18, 2024

தி.மலை: 12 தாலுக்காக்களில் நாளை ஜமாபந்தி துவக்கம்

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட 12 தாலுகாக்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (ஜூன் 19) தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்நிகழ்ச்சி 28ஆம் தேதி வரை சனி, ஞாயிறு நீங்கலாக நடைபெற உள்ளது. இதில், வருவாய் நிர்வாக கணக்குகள், தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய் புகார்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

தென்காசி மாவட்டத்திற்கு மழை

image

தென்காசி மாவட்டத்திற்கு இன்று (18.6.24) இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் ஜூன் 23ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!