Tamilnadu

News July 7, 2025

கோவையில் VAO லஞ்சம் கேட்டால் உடனே CALL பண்ணுங்க

image

கோவை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0422-2449550 என்ற எண் மூலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News July 7, 2025

நீலகிரி : விவசாயிகளுக்கு 100 % மானியம் வழங்கும் திட்டம்

image

நீலகிரி: நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவ சிறு/குறு விவசாயிகளுக்கு 100 % மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 % மானியமும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக சிறு/குறு விவசாயிகள் 2 எக்டரும், பெரிய விவசாயிகள் 5 எக்டரும் வரை பயன்பெறலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார்,குடும்ப அட்டை, பட்டா, பயிர் அடங்கல், சிறு/குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை வைத்து இந்த<> லிங்க் <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

News July 7, 2025

தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்

image

ஓசூரில் கடந்த 21ஆம் தேதி பாலம் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, மைசூர் செல்லும் வாகனங்களை தர்மபுரிக்கு மாற்றம் செய்து பிரித்து விடும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி தர்மபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி வழியாக (என்எச்-44) செல்லும் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, தர்மபுரி-ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் நல்லூருக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக பிரித்து அனுப்பப்படுகிறது.

News July 7, 2025

காணாமல் போன நகை தனது தாயார் உடையது

image

மடப்புரம் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா இன்று (ஜூலை 6) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காணாமல் போனது என் அம்மாவின் நகை தான், அவர் வயதானவர். மேலும், அவரால் காவல் நிலையத்திற்கு அடிக்கடி அலைய முடியாது என்பதால் தான் நான் புகார் எழுதிக் கொடுத்தேன். காணாமல் போன நகை தனது தாயார் உடையது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News July 7, 2025

நாமக்கல்: ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம்

image

நாமக்கல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம் . ஷேர் பண்ணுங்க !

News July 7, 2025

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

image

கிருஷ்ணா நீர்வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது 32 அடியாக உள்ள ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரி 73% நிரம்பியுள்ளது. விரைவில் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்து மே 21 முதல் நீர் வந்து கொண்டிருக்கிறது.

News July 7, 2025

திருத்தணியில் அலைகடலென பக்தர் கூட்டம்

image

திருத்தணியில் நேற்று (ஜூலை 6) ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தாம் படைவீடு முருகன் கோயிலில் பக்தர்கள் பெருமளவில் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். மூலவரை 3 மணி நேரம் காத்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. புதிய ஜெனரேட்டரும் சோலார் விளக்குகளும் நன்கொடையாக வழங்கப்பட்டன. கோயிலிலும் நெரிசல் காணப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

News July 7, 2025

திருத்தணி கோயிலுக்கு ஜெனரேட்டர்

image

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால், பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜெனரேட்டர், கோயில் இணை ஆணையர் ரமணியிடம், எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News July 7, 2025

மாவட்டத்தில் 213 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

image

புதுகை மாவட்டத்தில் 213 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பகுதிகளில் நடைபெற உள்ளது. தன்னார்வ தொண்டர்கள் வீடுதோறும் சென்று அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, விண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் வழங்குவார்கள். அதனைப் பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம், இந்த நிகழ்ச்சி 7- தேதி தொடங்கும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் துவங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!