Tamilnadu

News July 7, 2025

தருமபுரியில் நாளை மின்தடை 2/2

image

குளியனூர், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலைகொட்டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கனஅள்ளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயா தெரிவித்துள்ளார். உங்க பகுதி மக்களுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்துங்க.

News July 7, 2025

ராமநாதபுரம்: கஞ்சா கடத்தல்: 15 நாட்களில் 268 கிலோ பறிமுதல்

image

ராமநாதபுரம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. 15 நாட்களில் 268 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திரா, ஒடிசா, தேனி மலைப்பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. ஜூன் 22ல் முள்ளிமுனையில் 90 கிலோ, புதுக்கோட்டையில் 100 கிலோ, தீர்த்தாண்டதானத்தில் 78 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

News July 7, 2025

தஞ்சை மாநகர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

image

தஞ்சாவூர் அர்பன் துணை மின் நிலையத்தில் (ஜூலை 08) அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்கார தெரு, மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News July 7, 2025

திருப்பூர்: மகளை கர்ப்பமாக்கிய ஸ்டெப் ஃபாதர்!

image

திரூப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது தாய் இரண்டாவதாக பகாரைச் சேர்ந்த அபய் குமார்(40) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமானார். இதையடுத்து, தலைமறைவான அபய் குமாரை போலீசார் தேடி வந்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்று(ஜூலை 6) போலீசார் அவரைக் கைது செய்தனர்.

News July 7, 2025

கரூர்: கார் விபத்தில் இளைஞர் பலி

image

கரூர்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா(45), அவரது மகன் ஆகாஷ்(28), மகனின் நண்பர் தினேஷ்(27), செல்வகுமார்(27) ஆகியோர் மண்மங்கலம் பகுதியில் உள்ள சேலம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நிலை தடுமாறிய கார் சாலையோர போர்டில் மோதி விபத்தானது. இதில், படுகாயமடைந்த தினேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 7, 2025

திருப்பத்தூருக்கு இப்படி ஒரு சிறப்பா?!

image

திருப்பத்தூர், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழில் நகரமாகும். இது இந்தியாவின் தலைசிறந்த தோல் தொழில் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நகரில் காலணிகள் தயாரிப்பு, தோல் ஜாக்கெட்டுகள், கைப்பைகள், பெல்ட், ஜாக்கெட் போன்ற ஆடைகள் உற்பத்தி தொழில்கள் பரவலாக நடக்கின்றன. பல நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு இயங்குகின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் திருப்பத்தூருக்கு முக்கிய பங்கு உண்டு. ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

மது போதையில் பாலியல் பலாத்காரம்

image

வேலுரைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழி, 2 ஆண் நண்பர்களுடன் சென்னையில் உள்ள லாட்ஜில் மது அருந்தியபோது, மது போதையால் மயக்கத்தில் இருந்த அப்பெண்ணிடம் ஆண் நண்பர்களில் ஒருவர் இவ்வாறு செய்துள்ளார். கண் விழித்து பார்த்தபோது அப்பெண் ஆடை இல்லாமலும், பிறப்பு உறுப்பில் காயத்துடனும் இருந்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தோழி, ஆண் நண்பரை கைது செய்தனர்.

News July 7, 2025

உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோயில்

image

ராஜராஜ சோழனால் கி.பி.1010-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிமுடிக்கப்பட்டது. சிமென்ட் பூச்சு போன்ற எதுவும் பயன்படுத்தாமல் ஒரு கல்லுடன் மற்றொரு கல் என இணைக்கப்பட்டு, சுண்ணாம்பு போன்ற கலவைகளால் இது கட்டப்பட்டுள்ளது. கருங்கற்களை மட்டுமே கொண்டு 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட இக்கோயில்தான் உலகிலேயே பெரிய கோயிலாகும். இதனை உலக அதிசயமாக இணைக்க பலரும் கோரும் நிலையில் உங்கள் கருத்து என்ன ? ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

அரியலூர் அருங்காட்சியகம் பற்றி ஓர் பார்வை!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசியில் புதைபடிவ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் டைனோசர் முட்டைகள் மற்றும் பல புதைபடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அரியலூர் புவியியல் அமைப்பில் கடல் புதைபடிவங்கள் அதிகம் காணப்படுவதால், இந்த அருங்காட்சியகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அருங்காட்சியகம், மாணவர்களுக்கு புவியியல் மற்றும் தொல்லியல் பற்றிய அறிவை மேம்படுத்த உதவுகிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

பெரியகுளம்: வழக்கறிஞரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலு. இவரது தம்பிகளான அழகுராஜா, சங்கருக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்டது. இதனை பாலு சமாதானம் செய்துள்ளார். இந்நிலையில் சங்கர் அவரது மனைவி சிந்தனைச்செல்வி சேர்ந்து வீட்டிலிருந்த பாலுவை அவதூறாக பேசி, கல்லால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தென்கரை போலீசார் சங்கர், சிந்தனைச் செல்வி மீது நேற்று (ஜூலை.6) வழக்கு பதிவு

error: Content is protected !!