Tamilnadu

News July 6, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

சிறப்பு வாய்ந்த கோயில்கள்

image

காஞ்சிபுரத்தில் உள்ள 10 முக்கிய கோயில்கள். 1. ஏகாம்பரநாதர் கோயில், 2. காஞ்சி கைலாசநாதர் கோயில், 3. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், 4. வரதராஜ பெருமாள் கோயில், 5. ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், 6. ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில், 7. ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில், 8. ஐராவதனேஸ்வரர் கோயில், 9. சித்திரகுப்தர் கோயில், 10. த்ரிலோக்யநாதர் கோயில்.நம்ப ஊரில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News July 6, 2025

குழந்தை பாக்கியம் அருளும் பிரசன்ன வெங்கடேச பெருமாள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தென்திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு வைணவத் திருத்தலம். இது “தென் திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் சில ஐதீகங்களும், பூஜை முறைகளும் பின்பற்றப்படுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

திருச்சி மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-0431-2415031,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News July 6, 2025

தருமபுரியில் பைக்கில் சென்ற பெண் லாரி மோதி பலி!

image

மொரப்பூர் சாலையில் இன்று (ஜூலை 6) முக்காரெட்டிப்பட்டியை சேர்ந்த முல்லைவேந்தன் தனது மனைவி சசிகலா (28) மற்றும் இரு குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் மொரப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து சசிகலா கீழே விழுந்ததில், பின்னால் வந்த லாரி அவரது தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News July 6, 2025

15 வயது சிறுவன் தற்கொலை போலீசார் விசாரணை

image

வேலூர் நெல்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மேஸ்திரி. இவரது மகன் தனசேகரன்(15) தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு சாக்லெட் வாங்கித்தர ஆயிரம் ரூபாய் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கூலி வரவில்லை வந்ததும் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த தனசேகரன் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 6, 2025

புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் ▶வட்டாட்சியர் புதுக்கோட்டை-04322-221566, ▶விராலிமலை-04339-220777, ▶திருமயம்-04322-274223, ▶ஆவுடையார்கோயில்-04371-233325, ▶மணமேல்குடி-04371-250569, ▶இலுப்பூர்-04322-272300, ▶அறந்தாங்கி-04371-220528, ▶ ஆலங்குடி-04322-251223, ▶கந்தர்வக்கோட்டை-04322-275733. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 6, 2025

கடலூரில் உள்ள காசிக்கு நிகரான கோயில்

image

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 18ஆவது தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் 16 முறை இறைவனை வணங்குவதும், இங்கு ஒரு முறை வணங்குவதும் சமம் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும், இத்தலத்தில் ஒருமுறையும் வணங்குவது சிறப்பாகும். தெரியாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க !

News July 6, 2025

ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 2025 மூன்றாம் வாரம் வரை மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக காரைக்குடி மாநகராட்சியில் 27 முகாம்களும், சிவகங்கை, தேவகோட்டை, மானமதுரை ஆகிய நகராட்சிகளில் 31 முகாம்களும், 22 பேரூராட்சிகளில் 11 முகாம்களும் 12 சாதாரண ஊராட்சிகளில் 129 முகாம்களும் 3 புறநகர் ஊராட்சிகளில் 6 முகாம்களும் நடைபெற உள்ளது.

News July 6, 2025

தீராத கஷ்டத்தை தீர்க்கும் திருமுல்லைவாயில் பச்சையம்மன்

image

சென்னை அம்பத்தூர் – ஆவடி சாலையில் அமைந்துள்ளது சக்திவாய்ந்த திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயில். அன்னை பார்வதி தேவி, இமயமலையிலிருந்து மரகதவல்லியாக வந்து இத்தலத்தில் தவம் இருந்து சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம். வாழ்க்கைப் பிரச்சனைகளில் இருந்து மீளவும், செல்வ செழிப்பு பெறவும், தொழில் வளர்ச்சி அடையவும் இங்கு வந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு செல்கின்றனர். தீராத கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!