Tamilnadu

News May 7, 2025

கிருஷ்ணகிரி: இலவச வீட்டுமனை பட்டா பெற சிறப்பு முகாம்

image

கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள கிராமத்தார் மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்துவரும் தகுதியான நபர்களுக்கு, வீட்டு மனைப்பட்டா பெறுவதற்காக நாளை (மே.2) அனைத்து வருவாய் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா பெற விண்ணப்பித்து பயன்பெற திமுக மா. செயலாளர் எம்எல்ஏ மதியழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News May 7, 2025

பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஊராட்சியில் இன்று (மே.01) கிராம சபை கூட்டம் நடைபெற்றது.பின்பு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எளம்பலூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிகளை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கதர் ஆடை அணிவித்து, பரிசு வழங்கி சிறப்பித்தார்.

News May 7, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் 23 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியர்கள் 23 பேர் பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உத்தரவிட்டு உள்ளார். அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பல்வேறு வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய வட்டாட்சியர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது

News May 7, 2025

நொளம்பூர் மாணவியிடம் பாலியல் சீண்டல்

image

சென்னை நொளம்பூர் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சமத்துவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜென்ட் சரத் பாபு (31) போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சாலையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News May 7, 2025

இலஞ்சி கோயிலில் சித்திரை கொடியேற்ற விழா

image

தென்காசி மாவட்டம் இலஞ்சி வரலாற்று சிறப்புமிக்க திருவிளஞ்சி குமாரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களை மிக முக்கிய திருவிழாவான சித்திரை பெரும் திருவிழா இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

News May 7, 2025

இலவச கலைப்பயிற்சி தொடக்கம்

image

பொள்ளாச்சியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி மே.1ஆம் தேதி முதல் நடக்கிறது. இதில் 5 வயது முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் 97515- 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலைப் பண்பாட்டு மைய இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

தர்பூசணி பழத்தில் கலப்படம் இல்லை – தோட்டக்கலைத்துறை

image

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

News May 7, 2025

டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை இருமடங்கு உயர்வு

image

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் தற்போது பீர் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பீர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தற்போது 4 ஆயிரம் பீர்பாட்டில் விற்பனை ஆகிறது.

News May 7, 2025

கடலூர்: பதக்கங்களை குவிக்கும் 13 வயது மாணவி

image

கடலுாரைச் சேர்ந்த 13வயது மாணவி யாழினி, டேக்வாண்டோ போட்டிகளில் பல்வேறு நிலைகளில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் மாணவி யாழினி, புனித மரியன்னை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாநில அளவிலான போட்டிகளில் இதுவரை ஒன்பது முறை பங்கேற்று 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

News May 7, 2025

தி.மலை விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

மத்திய அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டிற்கு வருகிற ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை உள்ள ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.74-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 204 கிலோ மட்டுமே ஒரு விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அழுகவும்.

error: Content is protected !!