India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிவஞானபுரம் 29.2 மிமீ மழையும், சோழபுரம் 13.6 மிமீ மழையும், காடல்குடி 12.4 மிமீ மழையும் பதிவாகியுள்ளது, என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு ஆலயங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத்துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசுக்கு பாராட்டு விழா அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும்.
புதுகை மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர் மாணவிகள் விடுதிகளில் தங்கி பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பம் உள்ள 7,8,9, மற்றும் 11ஆம் வகுப்பு பயில் மாணவ மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் கடைசி தேதி வருகிற 5-ம் தேதி மாலை 5 மணி ஆகும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்: சேத்தமங்களம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் பாஜக சார்பில் காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில் சில சர்ச்சைக்குறிய வாசகங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்நிலையில், அப்பகுதி போலீசார் அந்த பேனரை அகற்றி செந்தில் குமரன், இளங்குமரன் ஆகிய பாஜகவினரைக் கைது செய்தனர்.
பொங்கலூர்: திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக்(22). இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி முடிந்த பிறகு, அலகுமலை பெருந்தொழுவு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி கம்பி வேலி மீது மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் 7 இடங்களில் நேற்று வெயில் சதமடித்த நிலையில், இன்றும் சில மாவட்டங்கள் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் நேற்று 101 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. ஈரோடு மக்களே காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வெளியே செல்வதை தவிர்க்கவும். (ஷேர் பண்ணுங்க.)
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ் தலைமையில், நல்லூர் போலீசார் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில், திடுமல் குட்ட பள்ளக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி, பாலசுப்ரமணியம், பூபதி, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஊறல் சாராயம், 17 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.
துறையூர் அருகே பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த பாலகுமார் மகன் தர்ஷன் (13). நேற்று பெற்றோருடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது, நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க தர்ஷன் இறங்கியுள்ளார். அப்போது மூழ்கத் தொடங்கிய அவரை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
விழுப்புரம் முட்டத்தூரில் கடந்த 22-ம் தேதி குழந்தை வரம் வேண்டி சாமிக்கு பரிகாரம் செய்வதாக கூறி 5 பவுன் பறித்து சென்றுள்ளனர். விசாரணை நடத்திய போலீசார் வேலூரை சேர்ந்த வல்லரசு, வள்ளியம்மாளை கைது செய்தனர். விசாரணையில் வள்ளியம்மாள் முதல் நாள் தேன் விற்பது போல் வந்து வீட்டை நோட்டம் பார்த்துள்ளார். வீட்டில் குழந்தை இல்லாதவர்கள் பற்றி தகவலை மகன் வல்லரசுவிடம் கூறியது விசாரணையில் தெரியவந்தது.
பர்கூர் அடுத்த ஜெகதேவியை சேர்ந்தவர் குமார்(50)- கவிதா (47) தம்பதி. இவர்களது 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (23) ஆகியோர் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு தரப்பினர் என்றாலும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், போலீசார் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர்கள் மீது வழக்கு பதிந்த நிலையில், அவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.