India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கம்பைநல்லூர் அருகே மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி கோமதி (35). இவருக்கும். அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (48), சுபாஷ் (29) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நாகராஜ், சுபாஷ் இருவரும் கோமதியை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. கோமதி அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசில் 2 பேரையும் கைது செய்தனர்.

காரப்பட்டை சேர்ந்த மணிகண்டன் (30), மனைவி தெய்வானை செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இவர்களது 2-வது மகன் உத்தரன் (2). நேற்று உத்தரனையும் செங்கல் சூளைக்கு அழைத்து சென்ற போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளான். சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சேலத்தைச் சேர்ந்தவர் ஹரி(48). இவர், 5 ஆண்டுகளாக விழுப்புரத்தில் வெல்டிங் வேலை செய்து வந்தார். உடல் நல பாதிப்பால், மாத்திரை சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று நகராட்சி மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தவரை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலாஜாபாத் தாலுகா. தென்னேரி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(65). விவசாயியான இவர், தனது பைக்கில் வாலாஜாபாத் சென்று விட்டு மஞ்சமேடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரகடம் சாலையில் உள்ள சேர்க்காடு பகுதியில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதியதில், லாரியி சக்கரத்தில் சிக்கிய மோகன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நீலகிரி: கூடலூர் காசிம்வயல் பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 பேரை தெருநாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மூவரும் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்த நிலையில், தற்போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி அருகே சிறு சாக்கவயலைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜு (26). இவர் 2023 ம் ஆண்டு திருவேகம்பத்தூர் அருகே புக்குடியில் உள்ள தனது அக்காள் கவிதா வீட்டுக்குச் சென்றார். அங்கு தனது அக்காள் கணவர் ரவிச்சந்திரனிடம் மது வாங்கித் தருமாறு தகராறு செய்த நிலையில், அவரை கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் ராஜுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருபவர் கோபிநாத் (38). இவர் கடந்த 15 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு துணையாக இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோபிநாத் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

குமரி மாவட்டம், தெங்கம்புதூர், இராஜக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், தர்மபுரம், பிள்ளையார்புரம், முருங்கவிளை, பண்ணையூர், தெக்குறிச்சி, பிள்ளைதோப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
Sorry, no posts matched your criteria.