Tamilnadu

News April 22, 2025

குவாரி நீரில் மூழ்கிய டிரைவரை தேடும் பணி தீவிரம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்(39) டிரைவர். தனது நண்பர்களான இசக்கிமுத்து, கோவிந்தராஜன், மாரிமுத்து, பொன்ராஜ் ஆகியோருடன் பந்தப்பாறை பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் தேங்கியுள்ள மழை நீரில் குளிக்கச் சென்றார். குவாரியில் குளித்த ஈஸ்வரன் திடீரென நீரில் மூழ்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஈஸ்வரனை இரவு பகலாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 22, 2025

வாய்க்காலில் மிதந்த அடையாளம் தெரியாத உடல்

image

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் உள்ள மோரி வாய்க்காலில் நேற்று இறந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் மிதந்துள்ளது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து அவர் யார், எப்படி என்பதை பற்றி விசாரித்து வருகின்றனர்.

News April 22, 2025

திண்டுக்கல் யாசகர் மர்மமான முறையில் உயிரிழப்பு

image

திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரா.ஞானசேகர் (70), யாசகம் பெற்று வந்தார். இந்த நிலையில், திண்டுக்கல் மேற்கு ரத வீதியிலுள்ள மவுன்ஸ்புரம் பகுதியில் ரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News April 22, 2025

முத்துப்பேட்டை அருகே தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சாம்பல்

image

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது குடிசை வீடு நேற்றிரவு திடீரென்று தீ பிடித்து எரிய துவங்கியது. தகவல் அறிந்து அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் கருகி நாசமானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 22, 2025

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

image

குலசேகரன் புதூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய அண்ணன் இசக்கியப்பன். இவர்கள் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தம்பியிடம் வீட்டை எனக்கு எழுதித்தருமாறு அவரது அண்ணன் கேட்டு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கியப்பன் சுடலையாண்டியை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து இசக்கியப்பனை கைது செய்தனர்

News April 22, 2025

கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

image

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பட்ட ஆணையத்தின் சார்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உறைவிடம் சாராத இலவச பயிற்சி 21 நாட்கள் வழங்கப்பட இருக்கிறது. வரும் 25ஆம் தேதி முதல் மே மாதம் 15 ஆம் தேதி வரை இதில் தடகளம், கால்பந்து, கபடி ஹாக்கி ,கூடைப்பந்து போட்டிகள் சிவகங்கை விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4.30 – 6.30 மணி வரையிலும் பயிற்சி நடைபெறும்

News April 22, 2025

குமரியில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு 34 லட்சம் நிதி

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 34 லட்சம் உத்தேச நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பொது பிரிவினருக்கு 26.86 லட்சம், ஆதி திராவிடர் இனத்தவருக்கு 6.80 லட்சம், பழங்குடி இனத்தவருக்கு 0.34 லட்சம் நிதி பெறப்பட்டு உள்ளது” என்றார்.

News April 22, 2025

திருக்கோஷ்டியூர் மஞ்சுவிரட்டில் வயதான மூதாட்டி

image

திருக்கோஷ்ட்டியூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று (21-04-2025), திருக்கோஷ்டியூரில் நடந்த மஞ்சுவிட்டில் இளையாத்தங்குடியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன் சொந்த காளையை தானே போட்டியில் அவிழ்த்துவிட கொண்டு வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

News April 22, 2025

ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு பிரிவு

image

நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் கொண்ட பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு 11 கோடியே 40 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாகர்கோவிலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News April 22, 2025

ஜிம் உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

image

மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த ஏப்.19ல் ஊக்க மருந்துகளை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையில் ஸ்டேஷனில் ஜிம் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை ஊக்க மருந்துகளாக கொடுக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!