India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை ஷேர் பண்ணுங்க.

பல வருடங்களாக திருவாரூர் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் கம்பன் விரைவு ரயிலை தடம் மாற்றி பேரளம், காரைக்கால் வழியாக இயக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், அதனை தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேர்தல் முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.23) வழங்கினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தசெந்தில்வடிவு உட்பட பலர் உள்ளனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.23) ஒட்டினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன்,இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு உட்பட பலர் உள்ளனர்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வாகனத்தில் நாம் தமிழர் கட்சி கொடி கட்டி தேர்தல் பரப்புரை செய்ய, செல்வம் என்பவர் வாகன அனுமதி கோரி மதுரை கலெக்டரிடம் மனு செய்திருந்தார். செல்வம் என்பவர் வாகனத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி கட்டி பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என பதில் உள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடுசெட்டிபட்டி மற்றும் காரிமங்கலம் கும்பாரஅள்ளி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு சோதனைச் சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரெ.சதீஸ் இன்று (23.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு நேர்மையாக 100 % வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இருசக்கர ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

காஞ்சியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.