Tamilnadu

News March 30, 2026

இராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஈரான் தாக்குதலில் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா அணிகுருந்தன் கிராமத்தைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் குவைத் நாட்டில் 15 வருடங்களாக எண்ணெய் நிறுவன கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குண்டு விழுந்து சந்தானகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க குடும்பத்தினர் கோரிக்கை.

News March 30, 2026

மதுரை: அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை!

image

மாநில அளவிலான செஸ் போட்டி மதுரை சாணக்யா செஸ் அகாடமி சார்பில், செந்தாமரை கலை கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மேலூர் அருகே அ.செட்டியார்பட்டி ஊராட்சி பள்ளியின் 5ம் வகுப்பு மாணவி யாகஸ்ரீ, 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் 3ம் இடம் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை அனைவரும் பாராட்டினர்.

News March 30, 2026

திருநெல்வேலி: மார்பிங் போட்டோவை பதிவிட்டவர் கைது!

image

ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் விசாலா கணபதி (18). இவர் சமூக வலைதளத்தில் இளம்பெண் ஒருவரின் படத்தை எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி இணையதளத்தில் பதிவிட்டாராம். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்படி முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் விசாரித்து விசாலா கணபதியை நேற்று இரவு கைது செய்தார்.

News March 30, 2026

வேட்புமனு தாக்கல் செய்ய 5 மட்டுமே அனுமதி

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு.மணீஷ் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வரும் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை,அரசுவிடுமுறை தவிர்த்து ஏணைய நாட்களில் ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம்,அதில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அலுவலக்த்தில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் !

image

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் இன்று (மார்ச்.30) நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வேட்பாளர் சீமான் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் /சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக கட்சியைச் சேர்ந்த முக்கிய நாதக பொறுப்பாளர்கள், நாதக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.

News March 30, 2026

திருச்சி: அஇபுதமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் சசிகலா, வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி கிழக்கு தொகுதியில் நந்தகுமார், ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் ஆகியோரை வேட்பாளராக அறிவித்துள்ளார். தொடர்ந்து இன்று அல்லது நாளை மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

பொதுமக்கள் சாலையில் வாகனங்களின் கதவை திறக்கும் முன் பின்னால் வாகனம் வருகிறதா என நன்கு கவனித்த பின் வாகனத்தின் கதவை திறக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. திடீரென கதவை திறப்பது விபத்துக்கு காரணமாகலாம், எனவே கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

News March 30, 2026

BREAKING: ஒரே நேரத்தில் முதல்வர், விஜய் வேட்புமனு தாக்கல்

image

சென்னை கொளத்தூரில் போட்டியிடும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், வியாசர்பாடியில் உள்ள அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.

News March 30, 2026

BREAKING சேலம்: திமுக மாவட்ட செயலாளர் வீடு முற்றுகை

image

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவிலிங்கம் வீட்டை வீரபாண்டி தொகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று முற்றுகையிட்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தருணை மாற்றக்கோரி முழக்கமிட்ட அவர்கள், வேட்பாளரை மாற்றாவிட்டால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதங்களை வழங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

News March 30, 2026

திருவள்ளூர்: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு!

image

சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று(30.03.2026) முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவள்ளுர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளையும், பயிற்சி மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்காக நடைபெற்ற பயிற்சி வகுப்புகளையும் தேர்தல் அலுவலர் பிரதாப் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!
↑