India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.15 லட்சம் வரை கடன் பெற தனி நபர்கள் மற்றும் சுயஉதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம். இதற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த 18-60 வயதுக்கு உட்பட்டவர்கள் <
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.118-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
செங்கல்பட்டில் அகில இந்திய மகளீர் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 4 நாட்களாக நடந்தது. இதில் நாமக்கல் ஆயுதப்படை பெண் போலீஸ் கீதா பங்கேற்று 4 வகையான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று ஒட்டு மொத்த முதல் பரிசை வென்று சாதனை படைத்தார்.இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஆயுதப்படை போலீஸ் கீதாவை நாமக்கல்லில் இன்று நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, குட்டை உள்ளிட்ட 116 நீர் நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட தலைவராக திருச்செங்கோட்டை சேர்ந்த ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து முன்னணி இயக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக களப்பணி ஆற்றி வரும் ரமேஷ் கிளை, நகரம், ஒன்றிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்நிலையில், தற்போது மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, அவருக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்கும் நோக்கில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் சுமார் 10491 கடைகளில் சோதனை செய்யப்பட்டு ரூ.13.81 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்கும் பட்சத்தில் ரூ.1,00,000 அபராதம் மற்றும் 90 நாட்களுக்கு கடைக்கான உரிமை ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ச.உமா இன்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ஆட்சித்தலைவர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சி ஆர்வளர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரூ.25,000 தகுதியுரையும் வழங்குகிறது. 2024ம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு www.tamilvalarchidurai.tn.gov.in தளம் வாயிலாக ஆக.5க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜூலை 31 அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேனிலைப்பள்ளி கலையரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா நேற்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான சத்துணவு வழங்கியமைக்காக, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பில்லூர், நெய்க்காரப்பட்டி, மணப்பள்ளி, கூனவேலம்பட்டி, அணைப்பாளையம், பரளி ஆகிய 6 பள்ளிகளுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள பள்ளிகளுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.
நாமக்கல் வருகைதந்த தேசிய துப்புரவு ஆணைய தலைவர் வெங்கடேசனை பூங்கொத்து கொடுத்து ஆட்சியர் வரவேற்றார். தொடர்ந்து ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நாமக்கல் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் உட்பட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.