Namakkal

News January 4, 2026

முட்டை விலையில் மாற்றம் இல்லை…!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வரும் நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் தொடர்ந்து நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 4, 2026

நாமக்கல்லில் ஜன. 07-ல் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தில் ஜனவரி மாதம் மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 7-ந் காலை 11 மணிக்கும் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்கண்ட நாளில் முகாமில் கலந்து கொண்டு, தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

News January 3, 2026

நாமக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 3, 2026

நாமக்கல்லில் குடிபோதையில் விபரீதம்!

image

நாமக்கல்: வெண்ணந்தூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரோஜா. இவரின் மகன் சண்முகம் (46). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தனித்தனியே வசித்து வருகின்றனர். சண்முகம் தாய் சரோஜா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மனமுடைந்த சண்முகம் மதுபோதையில் விட்டத்தில் நைலான் கயிற்றை மாட்டி கடப்பாக்கல்லில் ஏறி நின்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News January 3, 2026

நாமக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!

News January 3, 2026

நாமக்கல்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

image

நாமக்கல் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

நாமக்கல்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பத 2. Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 3, 2026

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 1 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்ச மாக 86 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

News January 3, 2026

நாமக்கல்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

image

நாமக்கல் மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 173 பணிகள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு சம்பளமாக மாதம் ₹19.900 முதல் ₹78,800 வரை வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18-50. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16 ஆகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்து மேலும் விபரங்கள் அறிந்த விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் யாருக்காவது உதவும் SHARE IT

News January 3, 2026

நாமக்கல் மக்களே மிக முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் இன்று ஜன. 3-ஆம் தேதி, நாளை ஜன. 4-ஆம் தேதி காலை 9 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் திருத்தம், மாற்றம் போன்ற பணிகளுக்காக மக்கள் இந்த இரு நாள்களில் முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இதை உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!