India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் தனியார் வெடி உற்பத்தி கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் திருவாவடுதுறை பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மூவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மயிலாடுதுறை மார்க்கமாக சென்று 29-ஆம் தேதி காலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 30-ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பூம்புகார் சுற்றுலாத் தளம் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பழனியில் இன்று நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று ஆசியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உட்பட பலரும் குருமகா சன்னிதானத்தை சந்தித்த நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
குத்தாலம் அருகே திருவாலங்காடு கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்து மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிப்பட்டுள்ளவர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டார். மேலும் உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆவின் பால் முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள், பால் முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுத்துறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்,கொள்ளிடம், செம்பனார்கோவில்,வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் நில மோசடி தடுப்பு பிரிவின் புதிய டி.எஸ்.பி-யாக எல்.மனோகரை நியமித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார். இதேபோன்று தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 20 டி.எஸ்.பி-க்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சீர்காழி அருகே கதிராமங்கலத்தில் நெய்வேலியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து முன்னாள் சென்ற இரண்டு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கதிராமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஜெயசீலன் மற்றும் ஆளவெளிகிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து மனுக்களையும் வழங்கினர். இந்தக் கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொறுப்பாளர்கள் வருகை தர உள்ள நிலையில் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்கும்படி மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.