India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழி அருகே அகர எலத்தூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சுகன்யா( 31). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகன்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய ரயிலானது மயிலாடுதுறையில் இருந்து காலை 10:45க்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது. இது வாரம் ஒருமுறை இயக்கக்கூடிய ரயிலாக செல்கிறது. இந்த ரயிலினை கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய பொதுமக்கள் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு எதிராக 2003ஆம் ஆண்டு விசிக சார்பில் நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே வழக்கு விசாரணை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
குத்தாலம் அருகே சேத்திர பாலபுரம் பகுதியில் உள்ள சேத்திரபாலபுரம் முதல் கோமல் பிரதர் சாலையில் அமைந்துள்ள கோமல்ரோடு ரயில்வே கேட் இன்றுகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மூடப்படுகிறது. எனவே, இவ்வழியாக கோமல், கொழையூர், தேரழுந்தூர், மேலையூர், தொழுதாலங்குடி பெருமாள் கோவில் உள்ளிட்ட மற்றும் வெளியூர் செல்பவர்கள் மாற்று வழியை பயன்படுத்துமாறு நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், நேற்று மாலை கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து விளையாடி மகிழ்ந்தனர்.
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆட்சியர் பள்ளிகளில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு போக்ஸோ வழக்குகளில் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் நேற்று தனியார் வெடி உற்பத்தி கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீர் வெடி விபத்து நடைபெற்றது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேரில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குத்தாலம் போலீசார் வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2024-2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல்வேறு துறை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
சீர்காழி வட்டத்துக்குட்பட்ட பூம்புகார் சுற்றுலா தளத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகஸ்ட்.25 பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும், சுற்றுலா தளத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.