Madurai

News March 15, 2026

கோரிப்பாளையம் அருகே கவுன்சிலர் கார் மோதி பெண் காயம்

image

மதுரை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் முருகன், நேற்று கோரிப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலத்தில் காரில் சென்றார். அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் காயம் அடைந்த பெண்ணை வாகன ஓட்டிகள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 14, 2026

மதுரை: நிலம் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

மதுரை மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. <>இங்கு கிளிக் <<>>செய்து புல எண் மற்றும் உட்பிரிவு எண்களை உள்ளிட்டு, உரிய கட்டணத்தைச் செலுத்திப் பழைய உரிமையாளர் மாற்றங்கள் குறித்த ஆவணத்தை தாங்களே டவுன்லோட் செய்து போலி பட்டாக்களை கண்டறியலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 14, 2026

மதுரை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1.20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

News March 14, 2026

மதுரை: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

image

மதுரை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<> www.tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மதுரை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News March 14, 2026

மதுரை: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News March 14, 2026

மதுரையில் OPS ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்

image

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, மேலூர் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் (மார்.12) எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை: + 2 மாணவி தூக்கிட்டு தற்­கொலை.!

image

எழுமலை அருகே சீல்­நா­யக்­கன்­பட்டி பவுன்­ரா­ஜா – சாந்தா தம்­ப­தியரின் மகள் ஆர்த்தி. இவர் எழு­மலை அரசு பெண்­கள் பள்ளி­யில் பிளஸ் 2 படித்து வந்­தார். 3 பாடங்­க­ளுக்­கான தேர்வு எழுதி­யிருந்­தார். நேற்று இயற்­பி­யல் தேர்வு எழுத இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். முதற்கட்ட விசார­ணை­யில் ஆர்த்­தி உடல்நல குறைவு ஏற்­ப­ட்டதால் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

News March 14, 2026

மதுரை: 1,317 கிராமங்களுக்கு 5 நாட்கள் குடிநீர் கட்..!

image

மதுரை மாவட்­டத்­தின் பல்­வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பழுத­டைந்துள்ள 130 மீட்­டர் நீளமுள்ள குழாய்களை மாற்­றிய­மைக்­கும் பணி நிறை­வுற்று, அதனை இணைக்கும் பணிகள் நடைபெ­ற­வுள்­ளதால் 1,317 கிராமங்களில் ( மாவட்டம் முழுவதும் ) குடிநீர் நிறுத்தப்படுகிறது. இன்று (மார்ச்.14) முதல் (மார்ச்.18) வரை 5 நாட்களுக்கு குடிநீர் விநி­யோகம் இருக்காது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!