India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி பெருமாள். இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாநகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையை திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 18 ம் தேதி வாஸ்து சாந்தி தொடங்கப்பட்டு, 30 ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி நடைபெறும் வரை அனைத்து நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 ம் தேதி கள்ளழகர் வைகை எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஊமச்சிகுளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, செந்தில் நகர் கண்ணனேந்தல் பகுதியில் வசிக்கும் பாண்டித்துரையின் ஒன்றரை வயது பெண் குழந்தை சுபாஷினி. இக்குழந்தையின் தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், தாயும் கள்ள காதலனும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குளத்தில் தூக்கி வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<

மதுரை மாவட்டத்தை பொருத்தவரை மதுரை, மேலூா் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் 214, அரசு உதவிபெறும் பள்ளிகள் 84, தனியாா் மெட்ரிக் பள்ளிகள் 181 என மொத்தம் 479 பள்ளிகள் உள்ளன.
இந்த நிலையில், இரு கல்வி மாவட்டங்களிலும் 18,980 மாணவா்கள், 19,267 மாணவிகள் என மொத்தம் 38,247 போ் 10ம் வகுப்புத் தோ்வை எழுதுகின்றனா். அனுமதி எண் ஒட்டுதல் பணியில் ஆசிரியா்கள் ஈடுபட்டனர்.

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் சரவணன்(39) பங்கு தாரர்களாக கப்பலூர் சிட்கோவில் கார்க் (தக்கை) செய்யும் கம்பெனி வைத்துள்ளனர். அங்கு பணியாற்றும் பெண்களை செல்போனில் படம் எடுத்து, அதை AI உதவியுடன் நிர்வாணமாக மாற்றி சரவணன் ரசித்து வந்துள்ளார். இதை பங்குதாரர் சுப்புராஜ் கண்டுபிடித்து திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சரவணனை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.