Madurai

News February 6, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம் – ஆட்சியர் பலிகடா

image

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார். அதில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு ஆட்சியரை பலிகாடாக ஆக்கி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் புகழை கெடுக்கும் வண்ணம் திட்டமிட்டே சதி செயல்கள் நடைபெறுகிறது. அமைதி பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் யார் கலந்து கொண்டார் என ஆட்சியர் தெரிவிக்கவில்லை. யாரோ ஒருத்தர் சொன்னார் என அறிக்கையில் அதிமுக பெயர் இடம் பெற்றுள்ளது என பேசினார்.

News February 6, 2025

ஆட்சியரை சந்தித்த அதிமுக நிர்வாகிகள்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், “சட்டம் ஒழுங்கு மக்கள் பிரச்சினையில் அதிமுக பிரதிநிதிகளை அழைக்காமல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 6, 2025

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து

image

டெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் (BASA) மதுரை விமான நிலையத்தைச் சேர்ப்பதற்கும், அதன் சர்வதேச அந்தஸ்தை அறிவிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று (பிப்.06) நேரில் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார். அதற்கு அவர் சாதமகான கருத்தை தெரிவித்ததாக எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

News February 6, 2025

மதுரை மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று(பிப். 06) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2025

‘வாங்க பாய், இது நமது மலை’ தீயாய் பரவும் போட்டோ

image

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பெரும் சர்ச்சையாகி வருகின்றது. இந்த நிலையில், நேற்று இந்து முன்னணி, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து இன்று (பிப்.05) சமூக வலைதளங்கள் முழுவதும் ‘வாங்க பாய் இது நம்ம மலை’ என்று முருகன் மாற்று மதத்தினரை கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போல் மயில் மீது ஏறி செல்வது போல் புகைப்படம் தீயாகப் பரவி வருகிறது.

News February 6, 2025

பாஜக மத வெறியை கிளப்புகிறது – எம்பி வெங்கடேசன்

image

மதுரை எம்பி வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப் பெருமான் சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல. முழுக்க முழுக்க பாஜகவின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது. ஆர்எஸ்எஸ், பாஜக ஒன்றாக, நன்றாக இருக்கும் ஊரில் மத வெறியை கிளப்பி தங்களின் வாக்கு வங்கியை பலப்படுத்த இதில் இறங்கியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

News February 6, 2025

மீண்டும் நிலம் வழங்கிய ஆயி என்ற பூரணம் அம்மாள்

image

மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு தனது மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆயி என்ற பூரணம் அம்மாள், மேலும் 91 சென்ட் நிலத்தை பள்ளிக்காக இன்று (பிப்.04) தானமாக வழங்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆயி பூரணம்மாளை பாராட்டி வருகின்றனர்.

News February 5, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.05) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 5, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம் – சு.வெ பதிவு

image

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைத்தத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம்  தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 90களில் இராமகோபாலன் வகையறாக்கள் முயற்சி செய்து தோல்வியடைந்ததை இப்போது எச்.ராஜா, அண்ணாமலை வகையறாக்கள் கையிலெடுத்துள்ளனர்.

News February 5, 2025

சோழவந்தான் கிரில் சிக்கன் கடைக்கு ரூ.4,000 அபராதம் 

image

சோழவந்தான் காவல்துறை கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையிலிருந்த 9 மாதிரிகளை எடுத்து அரசு லேபில் ஆய்வு செய்ய அனுப்பி வைத்திருக்கின்றனர். உணவகத்தை சுகாதாரமற்ற முறையில் கடையில் பராமரிப்பு இன்றி வைத்ததற்காக ரூ.2,000 நெகிழிப்பை பயன்படுத்தியதாக 2 ஆயிரம் என என 4 ஆயிரம் அபராதம் விதித்து சிக்கன் கொடுத்த ஆகாஷ் சிக்கன் என்ற இறைச்சிக் கடைக்கு நோட்டீஸும் வழங்கினர்.

error: Content is protected !!