India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் தைப்பூச நாளில் தென் மாவட்ட முருக பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து 990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மதுரை கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை – பழனி இடையே பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 08.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பழனியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 05.45 மணிக்கு மதுரை வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை ஒத்தகடை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் அந்தப் பெண் தூக்கி வீசப்பட்டார். விபத்தில் படுகாயமடைந்த முத்துலட்சுமிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் ஓட்டுநரை ஒத்தக்கடை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திடீர்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் அருகே வசிக்கும் ராமசாமி என்பவரது மகன் ராமசுப்பிரமணி ஆம்னி பேருந்து முகவராக பணிபுரிந்து வந்தார். நேற்று (பிப்.09) இரவு மர்ம நபர்கள் சிலர் அவரை ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். கொலை சம்பவம் குறித்து திடீர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தைப்பூச விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை பூ கிலோ ரூ.3000, மெட்ராஸ் மல்லி ரூ.1000, பிச்சி ரூ.1500, முல்லை ரூ.1500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.1000, ரோஸ் ரூ.200 க்கு விற்கப்படுகிறது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை தொடர்ந்து இதே விலையில் நீடிக்கும் என கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலையை ” சமணர் குன்று ” என அறிவிக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று பொதுநல அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) வள்ளலார் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள்,மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபான கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக்கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளில் நடத்தப்படும் மதுபானக்கூடங்கள் & அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
மதுரை, நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது; உண்டியலில் போட வேண்டும் என அறங்காவலர் செயல் அலுவலர் நேற்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். தட்டு காணிக்கை உத்தரவு இன்று வாபஸ் பெறப்பட்டு, செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கமளித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.