India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு; “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது” என்றார்.
கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டம் சிஞ்சலியில் பிப்.12 முதல் மாயக்காதேவி அம்மன் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து பிப்.13, 20 ஆகிய நாட்களில் புறப்படும் தாதர் வாராந்திர விரைவு ரயில் (11022) தாதரிலிருந்து பிப்.15,22 ஆகிய நாட்களில் புறப்படும். திருநெல்வேலி வாராந்திர விரைவு ரயில் (11021) ஆகியவை சிஞ்சலி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
திமு கழக நிர்வாக வசதிக்காக மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், மதுரை வடக்கு, மத்திய, தெற்கு தொகுதி பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மேற்கு தொகுதி பொருப்பாளராக அமைச்சர் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி எதிரே இருந்த நக்கீரன் நுழைவாயில் இடிக்கும் பொழுது நேற்று விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அலட்சியமாக பாதுகாப்பற்ற முறையில் இடிக்க உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
மதுரை அருகே கீழமாத்துரை சேர்ந்தவர்கள் வினோத் – வேல் முருகாயினி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயன்ற போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு உயிரிழந்தது. நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் பால் ஊக்கத் தொகையை பிரதமர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க சேமிப்பு கணக்கிற்கு அனுப்ப வலியுறுத்தி மதுரை ஆவினுக்கு பிப்.24 முதல் பால் நிறுத்தம் செய்து, கறவை மாடுகளுடன் ரோடு மறியல் போராட்டத்தை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் பெரியகருப்பன், உக்கிரபாண்டி, சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி காலிபணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் நாளை(பிப்.14).
<<-1>>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணபிக்கவும் * ஷேர்
மதுரையில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. ஆர்.டி.ஓ மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மூலம் மாவட்டத்தில் பஸ் சேவை இல்லாத பகுதிகளை கண்டறிந்து அங்கு வருகின்றனர். அந்த வகையில் புதிதாக 41 வழித்தடங்களுக்கு மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழித்தடத்தில் பஸ் இயக்க விருப்பமுள்ளோர் ‘பாரிவாகன்’ இணையதள போர்ட்டல் மூலம் ரூ.1600 கட்டணம் செலுத்தி, பிப்.24க்குள் விண்ணப்பிக்கலாம்.
மதுரையில் இன்று 13ஆம் தேதி புதிய டைடல் பூங்காவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொளி மூலமாக அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருந்த நிலையில் இவ்விழாவானது வரும் பிப்.18ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா சுமார் 9.97 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.289 மதிப்பீட்டிலும், திருச்சியில் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.315 மதிப்பீட்டிலும் டைட்டல் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (Project Assistant)திட்ட உதவியாளர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. M.Sc தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணபிக்க கடைசிநாள் 25.02.2025. தகுதியான நபர்களுக்கு Rs.25,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. *<
Sorry, no posts matched your criteria.