India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாட்டுத்தாவணி நக்கீரன் நுழைவாயில் இடிக்கும் பணியின்போது அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கட்டிடத்தை இடிப்பதற்கு முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என மதுரை மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை, ரத்னா ஃபேன் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் அருள் பிரகாச தாச சுவாமிகள் என்கிற கிருஷ்ணமூர்த்தி (81) வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடல் சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு மதுரை ரெட்டியார்பட்டியில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
மத்திய மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் ஒரு மாதம் கம்ப்யூட்டர், டெலி காலிங் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பிப்.18 முதல் நடக்கும் இப்பயிற்சியில் பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். இலவச சீருடை, உபகரணங்கள், ஊக்கத்தொகை மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். கூடுதல் விவரங்களை பெற 9095054177 அழைக்கலாம். *ஷேர்
பிப்.16, 2025 அன்று மதுரையிலிருந்து காலை 00.55 மணிக்குப் புறப்படும் ரெயில் எண். 12651 மதுரை – ஹஸ்ரத் நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை கடற்கரை, ரேணிகுண்டா மற்றும் கூடூர் வழியாக இயக்கப்படும். பிப்.15, 20, தேதி மாலை 04.55 மணிக்குப் புறப்படும் ரெயில் எண். 22641 திருவனந்தபுரம் சென்ட்ரல் ஷாலிமார் இருவார சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என மதுரை கோட்டம் தகவல்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் மட்டும் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச்.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (15.02.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு Free Birds என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம் என்பதால் வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கலைஞர் நூற்றாண்டு நூலக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. *ஷேர்
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் அமைப்பினர் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் பிப்.21ல் நடக்க உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கல்வித் தகுதிக்கேற்ப இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளன. பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் கல்விச் சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, போட்டோவுடன் அன்று காலை 10:00 மணிக்கு புதுார் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.*ஷேர்
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் போதும், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், தொல்லைகளுக்கு ஆளாகும் போதும், உயர் கல்விக்கான வழிகாட்டுதல் தேவைப்படும் போதும், அச்சமின்றி அழையுங்கள் 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு அழைக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பெண் குழந்தைகளுக்கு போலீஸ் அக்கா என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் இன்று (13.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் 95.21% (5,040 வழித்தட கி.மீ.களில் 4,799) மின்மயமாக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டம் 94.77% (1,321.84 வழித்தடத்தில் 1,252.09) மின்மயமாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே (52 வழித்தட கி.மீ.) மின்மயமாக்கல் நடந்து வருகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.