Madurai

News February 15, 2025

“வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது”: ஐகோர்ட் 

image

கடனை செலுத்திய பிறகும் சொத்து அடமான பத்திரத்தை தர மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. “வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது” உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என கூறி, வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தலைமை நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

News February 15, 2025

கடன் வாங்கும்போது கவனம் தேவை; காவல்துறை எச்சரிக்கை!!

image

மதுரையில் உள்ள பொது மக்களுக்கு மாநகர காவல் துறை சார்பாக ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டு கடன் மற்றும் தனி நபர் கடன் வழங்குகிறோம் என இணையத்தில் வரும் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.கடன் வாங்குபவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று கடன் பெற்று பயன்பெற வேண்டுமென காவல்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 15, 2025

மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 9,943 நாய்களுக்கு கருத்தடை

image

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. என மனு தக்கல் செய்து இருந்தார்மாநகராட்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 9943 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News February 15, 2025

திமுக அரசு துரோகம் செய்தது – ஆர்.பி.உதயக்குமார்

image

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு துரோகம் செய்தது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்து வைத்த வாதத்தின் அடிப்படையில் தான் டங்ஸ்டன் திட்டம் ரத்தானது. டங்ஸ்டன் விவகாரத்தில் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. ராஜினாமா செய்கிறேன் என ஸ்டாலினை பேச வைத்தவர் எடப்பாடியார் என பேசினார்.

News February 15, 2025

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

image

மதுரையில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், அதிமுகவின் அணிகள் தமிழக மக்களை விரைவில் சந்திக்க தயாராகிவிட்டார்கள். அதற்கென ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. மக்களை சமூக வலைதளத்திலும் சந்தித்து உண்மையை நியாயத்தை எதார்த்தத்தை சொல்லி வருகின்றனர் என தெரிவித்தார்.

News February 14, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.14) இரவு புறநகர் பகுதிகளான மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய காவல் சரகங்களில் இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 14, 2025

நில உரிமையாளர்களுக்கான இழப்பீடு – ஆட்சியர் அறிவிப்பு

image

மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாள் வரை இழப்பீட்டுத் தொகை பெறாத நில உரிமையாளர்கள், அலுவலக வேலை நாட்களில் தங்கள் நில உரிமை தொடர்பான ஆவணங்களுடன் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

News February 14, 2025

ஓபிஎஸ், டிடிவி இணைப்பு – செல்லூர் ராஜூ கருத்து

image

அதிமுக குறித்து ‘அண்ணன் ஓபிஎஸ், டிடிவி சார்’ பேச்சுக்களுக்கு நான் கருத்து சொல்லவில்லை. அதிமுகவிற்குள் எந்த பிளவுமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், விஜய் ஒரு பிரபலமான நடிகர். அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அவருக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கலாம் என Y பிரிவு பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.

News February 14, 2025

பவன் கல்யாண் திருப்பரங்குன்றம் பயணம் ரத்து

image

ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று மதுரை வந்த அவர் மீனாட்சி அம்மன் கோவில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில் அவரது பயணத்தில் மாற்றம் ஏற்பட்டு தற்போது அவர் மதுரையிலிருந்து பழனி முருகன் கோயிலுக்கு புறப்படுகிறார்.

News February 14, 2025

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் : செல்லூர் ராஜூ

image

பரவை பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ஆட்சி செய்தியாளர் சந்தித்து பேசுகையில்;  செந்தில் பாலாஜியிடம் சுப்ரீம் கோர்ட் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றது. திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தூக்கிவிட்டு இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். ஜாமீன் வாங்கி இருக்கும் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு கட்சி பணியை பார்க்க சொல்ல வேண்டும் என்றார்.

error: Content is protected !!