India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக வணிகவரித் துறையில் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் (ஜன.31 வரை) ஒரு லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.12,001 கோடி வருவாய் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை அருகில் பிப்.12ம் தேதி கல்லூரி மாணவர் அய்யாசாமி கைகள் வெட்டப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அய்யாச்சாமியிடம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன், தனி அறையில் விசாரணை நடத்தினார். அப்போது, கல்லூரி மாணவரிடம் சம்பவம் குறித்தும், ஏற்கனவே இது போன்று சம்பவம் நடந்ததா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
கள்ளிக்குடி கதிர்வேல் அளித்த மனுவில், பிப்.12ல் மாட்டுத்தாவணி நக்கீரர் தோரணவாயிலை அகற்றும் போது மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவரான என் மகன் நாகலிங்கம் இடிபாடுகளில் சிக்கி இறந்தார். மாநகராட்சியும், முதல்வரும் எந்த இழப்பீடும் வழங்கவில்லை. எனவே ரூ.50 இலட்சம் இழப்பீடு தர வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் பார்க்கிங் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பணியாளர்களுக்கு ஸ்டிக்கர் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது இந்த வளாகத்திற்கு முன்புற, பின்புற வாசல்களில் செக்போஸ்ட் அமைக்கப்படும். டாக்டர் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு மருத்துவமனையின் ஸ்டிக்கர் வழங்கப்படும். இதை ஒட்டியுள்ள டூவீலர்கள், கார்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளது. *ஷேர்
மதுரை மாவட்டத்தில் மாதந்தோறும் 4ஆவது சனிக்கிழமையன்று ஒருங்கிணந்த முறையில் நெகிழிக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் நெகிழிக் கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது என மதுரை கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
கம்பீர தோற்றத்தில் பெரியாழ்வார் திருவரசு மண்டபம்மதுரை கள்ளழகர் கோவிலில் ரூ.19.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை பக்தர்கள் பயன்பட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பெரியாழ்வார் பூங்கா அருகே ரூ.1.50 கோடியில் பெரியாழ்வார் திருவரசு மண்டபம் மேம்படுத்தப்பட்டு மக்களின் பார்வைக்காக உள்ளது. திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று துவக்கி வைத்தார்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா ரூ.289 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.மதுரை பூங்காவின் கட்டுமான பணிகளுக்கு நாளை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
Accel Infotech All Software Solution என்ற நிறுவனத்தின் மீது மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவில் (CCB) மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது சம்மந்தமாக பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய ஆவணங்களுடன் மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்களது மனுக்களை அளிக்கலாம் என மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரைக்கு அருகிலுள்ள திருமூகூரில் அமைந்துள்ள காளமேகப்பெருமாள் கோயில் பழமையான பாண்டியர் கால கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணம். இந்த கோயில், சுதர்சன சேனையை தனி சன்னதியில் கொண்டது என்பது விசேஷம். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தலத்தில் குடும்ப கடன், நோய் தீர பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். Share it
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த பட்ஜெட் 2047 ஆண்டுக்கு அடித்தளமிட்டுள்ள பட்ஜெட் எனவும், தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவலை மக்களிடம் பேசி வருகிறார் எனக் கூறினார்
Sorry, no posts matched your criteria.