India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காகு, மூக்கு, தொண்டைப் பிரிவில் 11.10.2024 அன்று விடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை மையம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் மருத்துவர் லெ. அருள் சுந்தரேஷ்குமார் MS(ENT) அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையகுழுவின் உறுப்பினர் பேராசிரியர் மருத்துவர் கே.செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- மதுரையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவோர் 94981-81206 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே போதை புழக்கத்தை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிராணியான நாய் ஒன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது நாயை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நான் என் மீது கொண்ட அதீத பற்றால் காணாமல் போன நாயை கண்டுபிடிக்க இந்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 13 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதனர்.
நேற்று முன்தினம் 27 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 74 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2020 – 2024 ஜூன் வரை 18 வயது நிரம்பாத 2,123 சிறுமிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது, அதில் 1835 குழந்தைகள் உயிருடனும் 288 குழந்தைகள் இருந்தும் பிறந்துள்ளது, பிரசவத்தின் போது 18 வயது நிரம்பாத மூன்று தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல் படி வெளிச்சத்துக்கு வந்துள்ளது
மதுரையில் நேற்று 5வது முறையாக புதுார் அல்அமின் நகரில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளி, வீரபாஞ்சானில் உள்ள இரு தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. விசாரணையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்து ஹேக்கர்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.
பேரையூர் தேவன்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன். தேனி உத்தமபாளையத்திற்கு அக்.8 இல் டூவிலரில் கண்ணன் சென்ற போது தவறி விழுந்ததில் தலைக்காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அக்.10ம் தேதி கண்ணன் மூலைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் மதுரை, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
தென்னக ரயில்வே மதுரை கூட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூரிலிருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் – திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் (06676) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் அன்று மாலை 4.00 மணிக்கு “INTERSTELLAR” என்ற திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள நூலக நிர்வாகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி (17) என்ற மாணவி இன்று காலை பள்ளிக்கு வந்த நிலையில், வளாகத்தில் வைத்து மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக மாணவியை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் கொண்டு செல்ல, மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.