Madurai

News November 3, 2024

பைக் மீது சரக்கு வேன் மோதி விபத்து-ஒருவர் பலி

image

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர் நேற்று மாலை திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுக்குளம் சந்திப்பு பகுதியில் பின்னால் வந்த சரக்கு வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த ஓட்டுநர் பிரபாகரன் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 3, 2024

மதுரையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

image

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.35 வரை, கத்தரிக்காய் ரூ.20 முதல் ரூ.30, வெண்டைக்காய் ரூ.10, பாகற்காய் ரூ.40, புடலங்காய் ரூ.30, உருட்டு மிளகாய் ரு.50,சின்ன வெங்காயம் ரூ.50 – ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.50 – ரூ.65, கேரட் ரூ.40,பட்டர் பீன்ஸ் ரூ.120, பீட்ரூட் ரூ.40, முள்ளங்கி ரூ.30,உருளைக்கிழங்கு ரூ.50 – ரூ.60 க்கு  விற்பனையாகிறது.

News November 3, 2024

மதுரையில் வீட்டில் தீப்பிடித்து பெண் பலி

image

மதுரை முடக்குச் சாலை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் 46 டாஸ்மார்க் மேற்பார்வையாளராக உள்ளார் மனைவி ஷர்மிளா 33 இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர் இரு தினங்களுக்கு முன்பாக வீட்டில் சமையல் செய்த போது கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது இதில் காயம் அடைந்த சர்மிளாவை கணவர் மகேந்திரன் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 3, 2024

மதுரையில் ரயில் தடம் புரண்டதற்கு இதுதான் காரணம்

image

ரயில்வே ஊழியர்களின் அலட்சியப்போக்காலேயே போடி எக்ஸ்பிரஸ் பெட்டி வீல் கழன்று தடம் புரண்டது என்று விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை – போடி ரயில் தடம் புரண்ட விவகாரத்தில் மதுரை ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் 4 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரயில்வே ஊழியர்கள் அலட்சியப் போக்குடன் செயல்பட்டதும் அதன் காரணமாகவே ரயில் தடம் புரண்டதும் தெரியவந்தது.

News November 3, 2024

இலவசமாக செயற்கை கால் பெற அழைப்பு

image

மதுரை மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கால்கள் இழந்தோருக்கு இலவசமாக நவீன செயற்கை கால் வழங்க வரும் 10 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் லட்சுமி அம்மாள் அரங்கத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கால் அளவு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தகுதியுடையோருக்கு டிச.1ம் தேதி செயற்கை கால் வழங்கப்பட உள்ளது.

News November 3, 2024

தென்மாவட்ட மக்களுக்கு சிறப்பு ரயில்

image

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நாளை (நவ.03) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை மாலை 7.15 மணிக்கு புறப்படும். அதேபோல திருச்சியிலிருந்து நாளை இரவு 10.50 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் சென்னைக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 3, 2024

முத்தங்கி சேவையில் முருகன் தெய்வானை

image

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் முருகனும் தெய்வானையும் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முத்தங்கியில் அருள் பாலித்த முருகன் தெய்வானைக்கு சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 2, 2024

மதுரைக்கு நாளை கனமழை எச்சரிக்கை

image

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை மதுரை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாகக் கொண்டு வருகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் தடுக்க மழைநீர் வடிகால்களை தூய்மை செய்து தயார் நிலையில் வைத்துள்ளது.

News November 2, 2024

ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் துவக்கம்

image

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று முதல் ஐப்பசி மாத கோலாட்டம் உற்சவம்  விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோலாட்டம் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. வீதியுலாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோலாட்டம் ஆடி மீனாட்சி அம்மனை வழிபட்டனர்.

News November 2, 2024

மதுரையில் பன்மடங்கு உயர்ந்த கட்டணம்

image

தீபாவளி விடுமுறையை தொடர்ந்து தென்மாவட்ட மக்கள் மதுரையிலிருந்து சென்னை செல்ல அலைமோதி வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி மதுரை ஆம்னி பேருந்து நிலையத்தில் சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3500 கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமான நாட்களில் ரூ.800 முதல் ரூ.1100 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

error: Content is protected !!