Madurai

News December 20, 2024

கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில் இயக்கம் – மதுரை கோட்டம்

image

கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூர் – தூத்துக்குடி இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கம். டிச.20-ல் காலை 9 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடி – பெங்களூர் சிறப்பு ரயில் டிச.21ஆம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு பெங்களூர் சென்றடையும். கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, சேலம் ரயில் நிலையங்களில் நிற்கும் என அறிவிப்பு.

News December 20, 2024

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

image

தேனியில் கஞ்சாவுடன் பிடிபட்ட வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட சிறப்பு போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் அடுத்தாண்டு ஜன.27ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டு சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கியது.

News December 20, 2024

மேலும் ஒரு புதிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது

image

மதுரையில் கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மேலும் ஒரு புதிய வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில்  கூறப்படுகிறது.தூய்மை வாகனம் வழங்கும் திட்டம் குறித்து யூடியூப் அவதூறாக பேசியதற்காக வழக்கு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News December 20, 2024

சுவாமி சிலைகள் உடைப்பு

image

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சிங்காரவேல்.அப்பகுதியில் சாய் பாப கோயிலை 6 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். நேற்று காலை கோயிலை திறந்தபோது ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரமுள்ள முருகன்,லட்சுமி சிவன் சிலைகள் உடைந்து கிடந்தன. எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உடைந்ததா அல்லது யாராவது சிலைகளை கிழே தள்ளி விட்டார்களாக என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 19, 2024

மதுரை: இரவு ரோந்து காவலர்கள் விபரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு ரோந்து பணி காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரம் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.

News December 19, 2024

வைகை எக்ஸ்பிரஸ் இனி மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

image

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, ஆதிபராசக்தி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி சுமந்து செல்வர். எனவே, பக்தர்களின் வசதிக்காக, மதுரை – சென்னை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் இன்று (டிச.19) தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News December 19, 2024

வண்டியூர் கண்மாயை 18 மாதங்களில் மீட்க ஐகோர்ட் உத்தரவு

image

வண்டியூர் கண்மாய் பூங்கா பாதுகாப்பு குறித்த வழக்கு இன்று (டிச.19) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மோட்டார் படகுகள் இயக்க கூடாது, கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். மேலும், ஆகாயத்தாமரைகளை அகற்றி மாசு இல்லாமல் 18 மாதங்களில் கண்மாயை மீட்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

News December 19, 2024

மேலூர் வட்டத்தில் 1.42 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்ட உத்தரவு

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் பதினெட்டாம்குடி ஓடையில் 1 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்தின் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

News December 19, 2024

ரயில் மறியலில் ஈடுபட்ட வி.சி.கவினர் 20 பேர் கைது

image

மதுரை மாநகர், விசிகவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மதுரை ரயில் நிலையத்தில் புகுந்த விசிகவினர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை – குருவாயூர் ரயிலின் முன்பாக அமர்ந்து மத்திய அமைச்சர் அமைச்சருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு முற்றுகையிட்டு ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 20 பேரை கைது செய்தனர்.

News December 19, 2024

மதுரை மாவட்ட பகல் ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

மதுரை மாவட்ட பகல் ரோந்து பணி, (டிச.18) காவல்துறை அதிகாரிகளின் பெயர்களும் தொலைபேசி எண்களும் வெளியீடு. பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு பகல் 2 மணி முதல் மாலை 5மணி வரை பகல் ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டன.

error: Content is protected !!